• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசை நாடகக் கதைகள்]

தளபதியும் அழகியும்

ஜியு பௌ லியன் எல்லாவகை நோய்களையும் குணப்படுத்த கூடியது எனக் கூறப்பட்டது. இது ஒரு ஓய்வு பெற்ற அரசு வைத்தியரின் குடும்ப பொக்கிஷமாக இருந்தது. இவரின் பெயர் ஜே ஹெடெ ஆகும். ஒரு நாள் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது, வைத்தியர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த லியோ சுங் பிங்கின் உயிரை காப்பாற்றினார். அவரின் மகனை தனது மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார். சக்காவர்த்தியின் தாய் நோய்வாய்பட்டிருப்பதையும் அவளுக்கு சிகிச்சையளிக்கப்படாததையும் கேள்வியுற்றார். வைத்தியர் தனது மகனான சௌ நியேன் மற்றும் தத்தெடுக்கப்பட்ட மகனான சுங் பிங்கை தலைநகரத்திற்கு பொக்கிஷத்துடன் சென்று சிகிச்சையளிக்கும் படி கூறினார். வழியில் சுங் பிங் பொருட்களை நாசம் செய்தான். அவன் சௌநியேனை ஓர் உயரமான மலையில் இருந்து தள்ளிவிட்டான். அவன் பின்னர் மருத்துவ பொக்கிஷத்தை எடுத்துக்கொண்டு அரசனுடைய தாயாரின் நோய்க்கு சிகிச்சை அளித்தான். அவன் உள்ளூர் அதிகாரியாக நியமிக்கப்பட்டான்.

சுங் பிங் வீட்டுக்குத் திரும்பி சௌ நியேன் நீரில் மூழ்கி இறந்ததையும் சொன்னான். சௌவின் வீட்டுக்கு தீ வைத்தான். சௌவின் மகளான வான்ச்சிங்கை தனது மனைவியாக்க விருபிய போது, வான்ச்சிங் தற்கொலை செய்ய முயன்றாள்.

சௌ குடும்பத்தின் பல உறுப்பினர்கள் தப்பிச் சென்றனர். அவ்வாறான ஒரு அனர்த்தம் வந்தவுடன் சௌ ஹெங்டெ பெரியளவு கடனுடன் நோய்வாய்ப்பட்டார். அவருடைய மருமகள் சு சியேன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நாட்டு எல்லையிலுள்ள ராணுவ தலைமை அதிகாரியைத் திருமணம் செய்தாள். ஆனால், சோதனை சாவடியில் சில எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தன. ராணுவத் தலைவர் அரச கட்டளையை ஏற்று ஒரு படையெடுப்புக்குச் சென்றார். தனது மகனை விட்டுப் பிரிந்தார்.

எட்டு வருடங்களுக்கு பின்னர், சு சியேன் அவளின் சொந்த மகனையும் தத்தெடுக்கப்பட்ட மகனையும் சேர்ந்து வளர்த்தாள். அரசு தேர்வில் இருவரும் வெற்றி பெற்றனர். சௌ நியேன் கூட காப்பாற்றப்பட்டார். அவர்கள் முழுக்கதையையும் அரசனுக்கு முன்னால் கூறினார்கள். லியோ சுங் பிங் கைது செய்யப்பட்டார். சௌ குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்தனர்.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040