• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசை நாடகக் கதைகள்]

ஒற்றைக் கொம்பு பணப்பை

தெவ்-ஜோவு என்ற ஊரில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த கன்னிப்பெண் சுயே சியாங்-லின் திருமணம் முடித்த போது, மகள் ஒரு போதும் தனது வாழ்க்கை தேவைக்கு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பெற்றோர்கள் பல சொத்துக்களை மகளுடன் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தனர். அந்தக் காலத்தில் மண்ப்பெண்ணுடன் ஒற்றைக் கொம்பு பணப்பை ஒன்றைக் கொடுத்தனுப்பும் ஒரு உள்ளூர் பாரம்பரியம் நிலவி வந்தது. அந்த மணப்பெண் சக்திவாய்ந்த. துடிப்பான மகன்களைப் பெற்றெடுக்க இந்தப் பணப்பை உதவும் என்று நம்பப்பட்டது. வெகுவிரைவில் தாயை விட்டுப்பிரியப் போகிறோமே என்ற மன வருத்தத்தில் சுயே துக்கமாக இருந்தாள். மகளை மகிழ்விப்பதற்காக அந்த ஒற்றைக் கொம்பு பணப்பையில் ஏராளமான நகைகளைப் போட்டு தாய் நிரப்பினாள்.

ஒரு பல்லக்கில் புதுமனப்பெண் அவளுடைய கணவனில் வீட்டுக்கு அனுப்பப்பட்டாள். நடு வழியில் திடீரென மழை வர ஆரம்பித்தது.

மணப்பெண் வீட்டார் மழையில் நனையாமல் இருக்க அருகில் உள்ள சுன்-ச்சியு என்ற புத்த கோயிலுக்கு சென்றனர். அதே நேரத்தில் அந்த புத்த போயிலுக்கு இன்னொரு பல்லக்கும் ஆட்கள் உடன் வர வந்தது. அதிலிருந்து புது மணப் பெண் ஜாஒ-ஜென் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது கணவனும் ஏழை. அந்த கோயிலில் தங்கி இருந்த நேரத்தில் செல்வி சுயே இன் தோழி மெய்-சியாங் அந்த ஏழைப் பெண்ணை புண்படுத்தும் சில வார்த்தைகளைக் கூறினாள். செல்வி ஒரு கடினமான வாழ்க்கை தனக்கு காத்திருக்கின்றது என்பது ஜொ ஜாவோவுக்கு தெரியும். பேச்சைக் கேட்டு, அவள் தேம்பி அழ அரம்பித்தாள். அந்து தேம்பலை செல்வி சுயே கேட்டாள். பல்லக்கு ஒரு வட்டமான திரைச் சீலையால் மூடப்பட்டிருந்தது. பொதுவாக மணப் பெண் வெளிப்பக்கத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்ப்பதில்லை. இப்போது செல்வி சுயே வெளியே எட்டிப் பார்த்து தனது வெளியில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிந்து சொல்லும் படி கேட்டாள். தோழி ஏழைப் பெண்ணிடம் சென்று பேச விரும்பவில்லை. செல்வி சுயே மிகவும் கோபமடைந்தாள். ஒரு பணிப்பெண்ணான லியாங் என்பவரை பதிலாக அழைத்து, என்ன நடக்கின்றது என்பதை பார்த்து அறிவிக்கும் படி கூறினார். பணிப்பெண் ஏன் அந்த ஏழை பெண் அழகின்றாள் என்பதைக் கூறினாள். செல்வி சுயே அவளுக்கு உதவி செய்ய விரும்பினார். ஏழையுவதி வறுமையினாலும், செல்வி சுயே எல்லாவற்றையும் தான் பெற்று இருக்கின்றேன் என்பதனாலும் இருவரும் துன்பமாக இருந்தனர். ஆனால், பல்லக்குக்குள் இருந்தனர். செல்வி சுயே எளிதில் கொடுக்க கூடிய ஒன்றையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், அவளுடைய ஆபரண பை இருந்தது. எனவே செல்வி சுயே அவளுடைய பெண்ணியல்பையும் தாராள மனதையும் காட்டி செல்வி ஜா ஒக்கு அவளுடைய பெயரையும் வெளிப்படுத்தாமல் அந்த ஒற்றைக் கொம்பு பையினைக் கொடுத்தாள்.

                        

ஆறு வருடங்கள் கடந்தன. செல்வி சுயே அவளுடைய கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்தாள். அவர்கள் ஒரு மகனைப் பெற்றனர். அவர்களுடைய மகனுக்கு இப்போது ஐந்து வயது ஆகும். அவள் தனது குழந்தை பருவத்தில் எப்படி இருந்தாளோ அதே போல மகனும் இருந்தான். ஒரு நாள் அவர்கள் அவளுடைய பெற்றோர்களிடம் சென்றார்கள். அங்கே திடீரென வெள்ளம் எல்லா குடும்பங்களின் சொத்துக்களையும் அடித்துச் சென்றது. குடும்பங்கள் வெள்ளத்தில் இருந்து தப்புவதற்காக எல்லா திசைகளிலும் சிதறி ஓடினர். செல்வி சுயே தனது தாதியுடன் ஒன்று சேர்க்கப்பட்டாள். இருவரும் லை-ஜோவுக்கு தப்பி சென்றனர். அவளுக்கு தனது கணவன், மகன் தாய் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவளுடைய தாதி அதித்ஷ்ட வசமாக ஒரு மீட்பு மையத்தில் இருந்து ஒரு கிண்ணம் சோறு வாங்கி வந்தாள். அவள் மிகவும் பசியாக இருந்தாள். ஆனால், உணவு தான் முன்பு சாப்பிட்டது போல் இல்லை. எனவே யாரோ ஒருவர் கேட்ட போது அவருக்கு கொடுத்துவிட்டாள்.

லு என்ற குடும்ப பெயரைக் கொண்ட ஒரு பணக்கார குடும்பம் அவர்களுடை மகனுக்காக இளமையான தாதியைத் தேடுவதாக கேள்விப்பட்டாள் செல்வி சுயே தனது முதியதாதியின் தூண்டுதலில் நேர்முக தேர்வுக்கு சென்றாள். செல்வி சுயே பின்னர் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அம்ர்த்தப்பட்டாள். லு ரியான்-லின் என்ற சிறுவன் செல்லி சுயே இன் சொந்த மகன் செய்தது போன்று சேட்டைகள் செய்து கொண்டு இருந்தான். இது அவளுக்கு அவளுடைய குடும்பத்தின் இழப்பை ஞாபகப்படுத்தியது. அவள் அழ ஆரம்பித்தாள். ரியன்-லின் ஒரு பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, அந்த பந்தை இரண்டாவது மாடியில் உள்ள ஜன்னலுக்குள் வீசினான்.

செல்வி சுயேக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அந்த அறைக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை. ஆனால், அந்த சிறுவன் அந்த பந்தை தனக்கு எடுத்துத் தரும்படி அவளை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் சம்மதித்து அந்த அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கு ஆச்சிரியமாக இருந்தது. அந்த பெரிய அறை ஒரு நினைவக கூடம் போன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சுவரிலே ஒரு பணப்பை தொங்கிக் கொண்டிருந்தது. இது புத்த கோயிலுக்கு அருகில் தன்னால் கொடுக்கப்பட்டது என்பதை அடையாளம் கண்டு கொண்டாள். அவள் இதில் தன்னை மறந்து போனாள். சிறுவன் தனது தயாரிடம் உதவிக்காக ஓடினான்.

திருமதி லு தனது கட்டளைக்கு சுயே கீழ்ப்படியாததால் மிக கோபம் அடைந்தாள். ஆனால் அவள் கூட திகைப்படைந்து, செல்வி சுயேயை விசாரிக்கத் தொடங்கினாள். திருமதி லும், செல்வி சுயேயை யார் என்பதை கண்டுபிடித்து, அவளுக்கு புதிய வசதிகளை கொடுத்தாள். ஆனால் செல்வி சுயேக்கு இது ஏன் என்று தெரியவில்லை.

முதியதாதி செல்வி சுயேயின் கணவனையும் தாயாரையும் மகனைக் கண்டுபிடித்து அவர்களை அவளிடத்துக்கு கூட்டிச் சென்றாள். அவளுடைய கணவன் அவள் எதாவது கெட்டதை செய்திருக்க வேண்டும். அதனால்தான் அவளுக்கு நல்ல துணிகள் கிடைத்தன என்று நினைத்தான். செல்வி சுயே அவளுடைய தாயாரிடம் ஏன் இந்த நடவடிக்கை என கண்டு பிடிப்பதற்கு வீட்டு உரிமைக்காரியிடம் கதைக்கும் படி கேட்டாள். வீட்டு உரிமைக்காரி அவள் ஒரு ஏழைப்பெண்ணாக இருந்ததை அவர்களுக்கு கூறினாள். அவளும் அவளுடைய கண்வனும் அவர்களுடைய திருமணத்தில் இருந்து இந்த பணப்பையில் உள்ளவற்றை கொண்டு ஒரு மகிழ்ச்சியான செல்வம் நிறைந்த வாழ்க்கையை நடத்துவதற்கு பயன்படுத்தினார்கள். அவர்கள் மிகவும் நன்றியுடையவர்களாக இருந்தார்கள். ஆனால், இதை கொடுத்தவர் யார்?எங்கே இருக்கினார் என்பதை கண்டுபிடிக்க இயலாமல் இருந்தார்கள். அவர்கள் அவர்களுடைய மதிப்புயர்வினை வெளிப்படுத்தும் பொருட்டு இந்த நினைவுக்கூடத்தை உருவாக்கினார்கள்.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040