• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசை நாடகக் கதைகள்]

சிலாங் தாயை தரிசிக்கின்றார்

பத்தாம் நூற்றாண்டில் இருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை சீனாவில் இரண்டு அரசியல் மாகாணங்கள் இருந்தன. ஒன்று லியௌ என அழைக்கப்பட்டது. இது வடகிழக்கு சீனாவில் இருக்கின்றது. ஒரு சிறுப்பான்மை இனத்தினால் ஆட்சி செய்யப்பட்டது. மற்றொன்று சௌங் என அழைக்கப்பட்டது. இது ஹான் பெரும்பாண்மை இனத்தினால் ஆட்சி செய்யப்பட்டது. லியௌ அவ்வப்போது சௌங் மீது ஊடுருவல் செய்து வந்தது. இரண்டு மாகாணங்களும் நீண்ட காலமாக போரில் ஈடுபட்டிருந்தன.

சௌங் மாகாணத்தில் ஒரு முதுநிலை இராணுவ அலுவர்களாக பணியாற்றிய யாங் என்ற குடும்பம் இருந்தது. குடும்ப உறுப்பினர்களான அப்பா, அம்மா, அவர்களுடைய எட்டு மகன்கள் அனைவரும் போர்க் கலை அறிவில் நிபுணத்துவத்தை பெற்று இருந்தனர்.

ஒரு நாள் லியௌ, சௌங் மாகாண சர்க்கரவர்த்தியை ஒரு அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அழைத்தது. சொங்கிற்கு இது தந்திரமோ இல்லையோ என்பது தெரிந்து இருக்கவில்லை. எனவே அவர்கள் யாங் குடும்பத்தின் மூத்த மகனை சௌங் இளவரசர் போன்று மாறுவேடம் தரித்து பேச்சு வார்த்தைக்கு அனுப்பினார்கள். இவர் ஏனைய 7 மகன்களால் வழிக்காட்டப்பட்டார். வழியிலே லியௌ படைகள் பதுங்கி இருந்து வழிமறித்து தாக்கின. மூன்று மகன்கள் இறந்தார்கள். ஏனைய நான்கு மகன்களும் சிலாங்கும் கைப்பற்றப்பட்டனர். சிலாங் தனது உண்மையான அடையாளத்தை லியௌ படைகளுக்கு கூறவில்லை.

பின்னர், சிலாங், லியௌ பிரதேசத்தில் வாழ்ந்தான். அவன் ஒரு அழகான இளைஞனாக இருந்தான். அத்துடன் மிக உன்னதமான யுத்த கலையினையும் கொண்டிருந்தான். லியௌ அரசி அவனை மிகவும் விரும்பினாள். தனது மகளுக்கு அவனை திருமணம் செய்ய நிச்சயித்தார்கள். அவனும் இளவரசியும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள். பின்னர், அவர்கள் ஒரு மகனையும் பெற்றனர். சிலாங் யாங் குடும்பத்தின் மகன் என்பதும் அவர் சௌங் மாகாணத்திற்காக பணியாற்றுகின்றான் என்பதும் லியௌவில் யாருக்கும் தெரியாது.

இரண்டு மாகாணங்களுக்கும் இடையில் யுத்தம் தொடர்ந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் லியௌ மாகாணம் ஒரு பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை எடுத்தது. சிலாங், இளவரசிகள், லியௌ அரசி எல்லோரும் லியௌ படைகளுடன் ஒன்று சேரந்து யுத்தாத்திற்க்குச் சென்றார்கள். சௌங் மாகாணம் யாங் குடும்பத்தின் ஆறாவது மகனை சிலாங்கின் சகோதரனை சௌங் படைகளுக்கு முதன்மை தளபதியாக அனுப்பியது.

தனது தாயும் சகோதரனும் வந்ததை கேள்வியுற்ற சிலாங் அவர்களை சந்திக்க விரும்பினான். ஆனால், அரசியிடம் இருந்து யுத்த தந்திர படி முக்கியமான கடவையை அம்பினை பெறாமல் அவனால் தாண்ட முடியவில்லை. சிலாங் கவலைப்பட்டான். ஆனால், இந்த நிலைமை பற்றி அவனால் எவருக்கும் கூற முடியவில்லை. அவன் எல்லா நேரமும் சந்தோஷமற்று இருந்ததை இளவரசி பார்த்தாள். எனவே ஏன் என்று அவள் கேட்டாள். சிலாங் பின்னர் தனது உண்மை அடையாளத்தை சொன்னான். அவன் தனது தாயை சந்திக்கலாம் என்பதற்காக அம்பினை தனக்கு பெற்றுத்தருமாறு இளவரசியிடம் உதவி கேட்டான். இளவரசி அவ்வாறு செய்வதற்கு சம்பதித்தாள். ஆனால், சிலாங் திரும்பி வரமாட்டான் என்பதையும் கவனத்தில் எடுத்திருந்தாள். சிலாங் ஒரு இரவுக்குள் திரும்பி வருவதாக வாக்குறுதியளித்தான்.

எனவே இளவரசி தனது மகனை லியௌ அரசியை பார்ப்பதற்கு எடுத்துச் சென்றார். அவள் குழந்தையை கிள்ளினாள், குழந்தை அழுதது. லியௌ அரசி என்ன நடந்தது என்று தெரியாமல் தனது பேரனுக்காக கவனம் செலுத்தி வந்தாள். இளவரசி இந்த சந்தர்ப்பத்தை பயனபடுத்தி தனது மகன் அம்பினை வைத்து விளையாட விரும்புவதாக சொன்னாள். அரசி தனது பேரன் மீது அளவு கடந்த பிரியம் கொண்டிருந்தாள். எனவே, அவள் அம்பினை வெளியில் எடுத்துக்கொடுத்து இதை அடுத்த நாள் திருப்பி கொடுக்க வேண்டும் என இளவரசியிடம் கூறினாள்.

சிலாங் அம்பினை தன்னுடன் எடுத்துச் சென்று யுத்த தந்திர கடவையை கடந்தான். அவன் சௌங் இராணுவ முகாமுக்கு சென்று தனது தம்பியை சந்தித்தான். 15 வருடங்களுக்கு பின் முதல் தடவையாக அவர்கள் சந்தித்த போது ஒருவர் தோளில் ஒருவராக மாறி உணர்ச்சி வசத்தால் அழுத்தனர். சிலாங் தனது தாயிடம் சென்றான். தனது மகன் இன்னும் உயிர்வாழ்வதை கேள்வியுற்ற அவனுடைய தாய் மிக சந்தோஷத்துடன் ஆச்சிரியம் அடைந்தாள். மூவரும் இரவு பூராகப் பேசினார்கள். மிக விரைவில் பகல் வந்தது. சிலாங் அவர்களிடம் இருந்து விருப்பமின்றி விடைபெற்ற சைகை செய்து லியௌ இராணுவ முகாமுக்குச் செல்ல தயாரானான்.

லியௌ யுத்த தந்திர கடவையை தாண்டிச்செல்லும் போது எப்படியே அவன் அடையாளம் காணப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டான். தனது மருமகன் உண்மையாகவே சௌங் மாகாணத்தின் ஒரு முதுநிலை இராணுவ அலுவலர் என்பதையும், அவனுடைய தாயைப் பார்ப்பதற்கு லியௌ இளவரசி அனுமதியின்றி உதவி செய்தாள் என்பதையும் கேவியுற்ற லியௌ அரசி மிக கோபம் அடைந்து சிலாங்கை கொல்லுவதற்கு கட்டளையிட்டாள். இளவரசி தனது குழந்தையை தன்னுடன் எடுத்துச் சென்று அவனை மன்னிக்கும் படி அவளுடைய தாயாரை கேட்டாள். அரசி இறுதியாக சிலாங்கை வீட்டுக்குப் போவதற்க்கும், அவனுடைய உறவினர்களை சந்திப்பதற்கும் அனுமதித்தாள்.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040