• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசை நாடகக் கதைகள்]

மலர் சமாதி

                          

பண்டைக் காலத்தில் நான் ஆன் என்ற மாநிலம் இருந்தது. து பௌ என்ற மாநில அதிகாரிக்கு து லி நியாங் என்ற ஒரு மகள் இருந்தாள். து பௌ தனது மகளுக்கு கல்வி கற்ப்பிப்பதற்கு ஒரு ஆசிரியரை அமர்த்தினார். இந்த ஆசிரியர் சீனாவின் முதலாவது பண்டைக் கவிதை தொகுதியை கற்பித்தார். து லி நியாங்கின் அடிமைச் சிறுமியும் கூட இந்த புத்தகத்தை கற்றாள். ஆனால் இவள் அடிக்கடி பாடல் வகுப்புக்களில் பங்கு கொள்ளாமல் விளையாடச் சென்று விடுவாள்.

சீனாவின் பிரபுத்துவ சமூகத்தில் பெண்களின் திருமணத்தை பெற்றோர்களே தீர்மாணித்தனர். பெண்களுக்கு தங்கள் கணவன் திருமணத்திற்கு முன்னர் எப்படி இருப்பார் என்பது கூட தெரிந்து இருக்கவில்லை. து லி நியாங் இந்த பாடல்களை படிக்க மிக விரும்பியிருந்தாள். ஆண்களும் பெண்களும் தமது வாழ்க்கை துணைவர்களை சுதந்திரமாக தெரிவு செய்வது பற்றி பாடல்கள் விவரித்தன.

வசந்தம் வந்தது. கொல்லைப் புறத்தில் ஒரு அழகான தோட்டம் இருக்கின்றது என்பதை து லிநியாங்கிடம் அடிமை சிறுமி சொன்னார். து லிநியாங் எப்போதும் விதிகளுக்கு கட்டுப்பாட்டவள். ஒவ்வொரு நாளும் வீட்டுக்குள் இருந்து தையல் வேலைகளையும் சில எழுத்த வாசிப்பு வேலைகளை செய்தாள். அவள் ஒரு போதும் விளையாடுவதற்கு வெளியே சென்றதில்லை. எனவே அள் அடிமை சிறுமியுடன் பின்னால் உள்ள கொல்லைப்புறத் தோட்டத்திற்குச் சென்றாள்.

அது ஒரு அழகான தோட்டமாக இருந்தது. செடிகள் பசுமையாக இருந்தன. குளத்தில் வாசி படர்ந்திருந்தது. பூக்கள் பூத்திருந்தன. பறவைகள் மரங்களில் பாடிக் கொண்டிருந்தன. இயற்கை காட்சிகள் காணப்பட்டன. து லி நியாங் வீட்டுக்குள் இருந்து வாசித்ததையும், சில தையல் வேலைகள் செய்தது பற்றி நினைத்து மனம் வருந்தினாள். அவளுடைய இளமை இந்த இயற்க்கை காட்சிகளை போன்று ஒன்றும் முன்னேற்றம் இல்லாமல் சென்று இருக்க வேண்டும். அழளால் இந்த துர்க்கரமான மன இயல்பில் இருந்து வெளிவர முடியவில்லை. எனவே அவள் அவளுடைய அறைக்கு திரும்பி சென்று ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள்.

அவள் ஒரு கனவு கண்டாள். அக்கனவில் அவள் தோட்டத்திற்கு திரும்பி செல்கின்றாள். ஒரு இளமையான அறிவுள்ள இளைஞன் அவளை நோக்கி வந்தான். அவன் து லிநியாங்கை அழகாகவும் பிரகாசமாகவும் இருப்பதாக கூறினான். ஆனால், அவன் து லி நியாங் தனது இளமையை வீணாக்குவதைக் கண்டு மனம் வருந்தினான். து லிநியாங் அவன் தன்னை புரிந்து கொண்டு விரும்பத் தொடங்கியதை நினைத்து தானும் அவனை விரும்பத் தொடங்கினாள். தோட்டத்தில் தேவதைகள் நடனமாடி வாழ்த்தின.

அன்னை வந்து கனவை குழப்பினாள். லி நியாங் இப்பவும் கனவில் லயித்திருந்தாள். எனவே அவள் மீண்டும் தோட்டத்திற்கு திரும்பினாள். ஆனால், அங்கே அந்த இளைஞனை தவிர எல்லாம் இருந்தன. அவளால் அவனைக் காண முடியவில்லை. அவள் மிகவும் துக்கப்பட்டாள். அவள் நோய்வாய்ப்பட்டாள். தோட்டத்திலும் கனவிலும் கண்ட வசந்தத்தை நினைத்து ஒரு படத்தை வரைந்தாள். அப்படத்தை அடிமை சிறுமியிடம் கொடுத்து தோட்டத்தில் வைக்க சொன்னாள். அவள் மிக விரைவில் இறந்துவிட்டாள். ஆனால், இறப்பதற்கு மன்னர் தான்னை அந்த பெரிய பிளம் மரத்திற்கு கீழ் புதைத்து ஒரு சமாதி கட்டும் படி தனது பெற்றோர்களிடம் கூறினாள்.

பின்னர், அக் குடும்பம் வேறு இடத்திற்கு சென்றது. லியு மங்மெய் என்ற இளம் அறிஞன் ஒருமுறை அந்த வழியாக வந்த போது நோய்வாய்ப்பட்டான். எனவே அவன் அருகில் உள்ள தோட்டத்தில் தங்கினான். து லிநியாங் கனவில் கண்ட அறிஞன் லியு மங்மெய் ஆகும்.

லியு மங்மெய் சற்று நோயில் இருந்து குணமடைந்த போது அவன் தோட்டத்தில் உலாவந்த போது தற்செயலாக அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தான். அவன் அந்த அழகான பெண்ணை முன்னர் சந்தித்ததாக நினைத்தான். எனவே அவன் அப்படத்தை தனது அறையில் தொங்கவிட்டான். அவன் ஒவ்வொரு நாளும் உயிர்வாழ்வதாக நினைத்து அவளை அழைத்தான்.

து லி நியாங் இறந்திருந்த போதிலும் அவளுடைய சமாதி இப்பவும் அந்த தோட்டத்திலேயே இருந்தது. லியு உண்மையாகவே அவளை விரும்புவதாக கண்டு து லிநியாங் ஒவ்வொரு இரவும் அவனை சந்திப்பதற்கு வந்தாள். லியு மங்மெய் எப்படி அவர்கள் இனிமேல் ஒன்றாக வாழ்ந்திருக்கலாம் என்பதை கேட்டான். சிறிது காலம் செல்ல சமாதியை திறக்கும் போது வாழ்க்கைக்குத் திரும்பி வருவேன் எனத் து லிநியாங் கூறினாள். லியு மங்மெய் அவள் கூறியதை செய்தான். து லிநியாங் மறுபிறவி எடுத்ததை பார்த்து மகிழ்ச்சியடைந்தான். இருவரும் சந்தோஷமாக திருமணம் செய்தனர்.

பல மக்கள் துலிநியாங்கின் கதை கேட்டு மனமுருகினர்.

வெள்ளைப் பாம்பு புராணம்

முன்மொரு காலத்தில் ஏர் மெய் மலையில் இரண்டு பாம்புகள் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்தன. ஒன்று ஒரு வெள்ளை பாம்பு ஆத்மா ஆக இருந்தது. மற்றது ஒரு பச்சை பாம்பு ஆத்மாவாக இருந்தது. இரண்டுமே பூமியில் அழகான இயற்கைக் காட்சிகளை விரும்பின. எனவே, அவைகள் தாங்களாகவே இரண்டு அழகான பெண்களாக மாறின. வெள்ளை பாம்பு பை சு ஜென் என அழைக்கப்பட்டது. பச்சை பாம்பு சியௌ ச்சிவ் என அழைக்கப்பட்டது. அவைகள் புகழ்பெற்ற இயற்கை காட்சித் தலமான ஹாங்சோவில் உள்ள மேற்கு ஏரிக்கு வந்தனர்.

மேற்கு ஏரியில் நல்ல அழகாக இருந்தது. அவர்கள் பிரபலமான உடைந்த பாலத்திற்கு வந்தனர். திடீரென மழை பொழிய ஆரம்பித்தது. எனவே அவர்கள் ஒரு வில்லோ மரத்திற்கு கீழே ஒதுங்கினர். அதேநேரத்தில் ஒரு இளைஞன் கையில் ஒகு குடையுடன் வந்தான். அவன் சு சியேன் என அழைக்கப்பட்டான். சமாதியை கூட்டி சுத்தம் செய்த பின்னர் அங்கு வந்திருந்தான். இரண்டு பெண்கள் மரத்திற்கு கீழே நின்று கொண்டிருந்ததை பார்த்த சு சியேன் அவர்களுக்கு குடையைக் கொடுத்து ஒரு படகை அழைத்து வீட்டுக்கு அனுப்பினார்.

பை சுஜென் அந்த இளைஞனை விரும்ப ஆரம்பித்து குடையை அடுத்த நாள் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினாள்.

அடுத்த நாள், பை சுஜெனின் வீட்டுக்கு சு சியேன் சென்றான். பை அவனுடைய உதவிக்காக நன்றி கூறி அவனுடைய குடும்பத்தை பற்றிய தகவல்களை கேட்கத் தொடங்கினாள். சு சியேனுடைய பெற்றோர் இறந்ததும் அவன் தனது சகோதரியுடன் வாழ்ந்வதும் அவளுக்கு தெரிந்தது. அவன் ஒரு மருத்துவர் கடையில் வேலை செய்தான். பை சுஜியேன் பின்னர் சு சியேனை தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டாள். சு சியேன் உடன்பட்டான. எனவே, இருவரும் திருமண சடங்குகளை செய்து முடித்தனர். திருமணத்தின் பின்னர் அவர்கள் சொந்தமாக ஒரு மருந்துக் கடையை ஆரம்பித்தனர். பை சுஜென்னுக்கு குணப்படுத்து கலை தெரியும். ஒவ்வொரு நாளும் அவள் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாள். ஒவ்வொருவரும் அவளை விரும்பினர். அவர்கள் பை சீமாட்டி என அவளை அழைத்தனர்.

அருகில் ஒரு பௌத்த ஆலயம் இருந்தது. அங்கே பாஃகை என்ற ஒரு பௌத்த துறவி வாழ்ந்தான். அவர் பை சுஜென் ஒரு பாம்பு ஆன்மாவாக இருந்தாள் என்பதை அறிந்த போது அவர் பையை சு சியேனை விட்டு நீங்குவதற்கு ஒவ்வொரு தந்திரமாக செய்யத் தொடங்கினார். ஏனென்றால் அந்த மாம்பு ஆத்மா மக்களுக்கு எதாவது கெடுதியை செய்துவிடும் என்று அவர் நினைத்தார்.

பாஃகை சு சியேனின் வீட்டுக்குச் சென்று அவனுடைய மனைவி ஒரு பாம்பு ஆத்மாவாக இருந்தாள் என்பதை அவனுக்கு கூறினார். சி சியேன் இதை நம்பவில்லை. பின்னர் பாஃகை சு சியேனுக்கு டிராகன் படகு விழாவில் பை சுஜென் குடிப்பதற்கு சிறியளவில் மஞ்சள் மதுவை பெறும்படி கூறினார். மது குடித்த பின்னர் பை அவளுடைய மூல வடிவத்தை வெளிப்படுத்துவாள் என்று நினைத்தார்.

டிராகன் படகு விழா வந்த போது வீட்டில் ஒவ்வொருவரும் மது திராட்சை ரசத்தை மிகழ்ச்சியுடன் பருகினார்கள். மதுவைக் கண்டு பாம்பு பயந்தது. பை சுஜென், சியௌ ச்சிவ் இருவரும் மலையில் சிறிது நேரம் ஒளியலாம் என்று நினைத்தார்கள். ஆனால், சு சியேன் இது பற்றி சந்தேகப்படுவானோ என்ற பயம் இருந்தது. எனவே அவர்கள் உடல்நலம் கெட்டாக பாசாங்கு செய்தனர்.

சு சியேன் பாஃகை சொன்னதை நம்பவில்லை. ஆனால், அந்த நாளில் அனைவரும் மதுவை பருகியதால், அவன் பையை ஒரு சிறிதளவில் குடிக்க தூண்டினான். பை மறுக்கவில்லை. ஆகவே, அவள் ஒரு குவளை குடித்து அசௌவகரியத்தை உணர தொடங்கினாள். சு சியேன் அவளை படுக்கைக்கு எடுத்துச் சென்று அவளுடைய போதையை தெளிவிப்பதற்காக சூப் எடுக்கச் சென்றான். அவன் திரும்பி வந்த போது படுக்கையில் ஒரு பெரிய வெள்ளைப் பாம்பைக் கண்டு பயந்து போனான். பயத்தினால் சு சியேன் இறந்தான்.

 

பை சுஜென் தூங்கி எழுந்த போது சு சியேன் இறந்து கிடந்ததை பார்த்து தூக்கமடைந்தாள். அவள் அவனை சியௌ ச்சிவ்கை பார்க்கும் படி கூறினாள். அவள் பளபளப்பான தோற்றத்தைப் பெறுவதற்காக தேவலோக மலைக்கு சென்றாள். பளபளப்பான தோற்றம் மட்டும் தான் சு சியேனின் உயிரை காப்பாற்றும் எனக் கூறப்பட்டது.

அந்த நேரத்தில் பை சுஜென் கருவற்றி இருந்தாள். அவள் தேவலோக மலைக்கு சென்றாள். ஆனால், தேவலோக பையனால் அவள் தடுத்து நிறுத்தப்பட்டாள். இருவரும் கடுமையாக சண்டையிட்டானர். தேவலோக பெரியவர் அவள் உண்மையாகவே தனது கனவனை காப்பாற்ற விரும்புகின்றாள் என்பதை பார்த்து பளபளப்பான தோற்றத்தை அவளுக்குக் கொடுத்தார். எனவே, சு சியேன் உயிர்ப்பிக்கப்பட்டான். ஆனால், அவனுடைய பயம் நீங்கவில்லை. எனவே பை சுஜென் ஒரு திட்டம் போட்டாள். அவள் கூரை மீது தொங்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாம்புக்குள் வெள்ளை ஒட்டியானத்தை திருப்பினாள். சு சியேன் தன்னுடைய மனைவி ஒரு பாம்பு ஆத்மாவாக இருந்தாள் என்ற சந்தேக்ததை ஒழித்தான்.

ஆனால் பாஃகை ஒத்துக்கொள்ளவில்லை. அவர் சு சியேனை ஏமாற்றி ஆலயத்துக்கு கூட்டிச் சென்றார். வீட்டுக்கு போகவிடவில்லை. பை சுஜென் மற்றும் சியௌ ச்சிவ் கோயிலுக்குச் சென்று சு சியேனை திருப்பி பெற முயற்சித்தார்கள். அவர்கள் பாஃகையுடன் மிக கடுமையாக சண்டையிட்டனர். அச்சண்டை கர்ப்பத்தில் உளஅள குழந்தையை குழப்பமடைய செய்தது. பை சுஜென் தோற்கடிக்கப்பட்டாள். அவள் உடைந்த பாலத்திற்கு வந்த போது அவள் முதலில் சு சியேனை சந்தித்த போது ஏற்பட்ட அனுபவத்தை மீண்டும் உணர்ந்தாள். அவள் மிகவும் துக்கப்பட்டாள். சியௌ ச்சிவ், சு சியேன் பாஃகாயினஅ சொல்லைக் கேட்டு தன்னை விரட்டியதாக உதவியுடன் சு சியேன் ஒரு சிறிய பிக்கவின் கீழ் ஆலயத்தில் இருந்து தப்பி தனது மனைவியை உடைந்த பால்த்தில் இருப்பதை கண்டான். பை சுஜென் தான் ஒரு பாம்பு ஆத்மாவாக இருந்ததை அவனுக்கு சொன்னாள். பை சுஜென் தன் மீது ஒரு ஆழ்ந்த உணர்வு வைத்திருந்ததை சு சியேன் அறிந்திருந்தான். எனவே, அவன் ஒரு பாம்பா அல்லது மனிதனோ அவன் தனது வாழ்க்கை முடியும் வரை அவளுடன் வாழ்வதாக வாக்குறுதி கொடுத்தான்.

அவர்கள் தங்களது வீட்டுக்குத் திரும்பி வந்தனர். பினஅனர் பை சுஜென் ஒரு மகனை பெற்ற எடுத்தாள். மகன் வயதாக இருந்த போது மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் பாஃகை மீண்டும் வந்தார். அவர் சு சியேனின் வாதத்தை புறக்கனித்தார். பை சுஜென்னை மேற்கு ஏரிக்கு அன்னமயில் உளஅள பெய்பூஃங் கோபுரத்தினஅ கீழ் அமர்த்தினார்.

சியௌ ச்சிவ் ஏர் மை மலைக்கு தப்பி சென்றா. அவள் திறமைகளை கடினமாக கற்றாள். அவள் இறுதியாக பாஃகையை தோற்கடித்து பை சுஜென்னை காப்பாற்றினாள்.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040