• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசை நாடகக் கதைகள்]

பை ஜியே துங் சின்

ஜொங்ஷான் சு தொங் சக்கரவர்த்தியின் மனைவி லியாங் ஈ தனக்கு ஒரு மகன் பிறக்காததால் தூக்கமாக இருந்தாள். தனது மகளை ஒரு பையனாக மாற்றினாள். அவள் தனது மகளின் தோளில் ஒரு அடையாளத்தை இட்டாள். அந்தப் பையனுக்கு சு தியேன்பௌ என பெயரிட்டாள்.

பதினெட்டு வருடங்களுக்கு பின்னர் சாங் மிங் என்பவர் பாடகி பை லியிங்கைக் கடத்திச்சென்று, பை லியிங்கின் தந்தையை மிரட்டி கொலை செய்தார். பை லியிங்கை சு தியேன்பௌ காப்பாற்றினான். சாங் மிங் பழிவாங்காமல் தடுக்கும் வகையில், அவளை தனது வீட்டில் வைத்திருந்தான். இருவரும் காதலில் விழுந்தனர். ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்ய தீர்மானித்தனர். ஏழைக் குடும்பத்தில் வாழந்த பை லியிங்கை சு தியேன்பௌவின் தாயார் விரும்பவில்லை. ஆனால், அவளை திட்டி அடித்த போது, பை லியிங்கின் தோளிலுள்ள அடையாளத்தைக் கண்டார்.

அந்த நேரத்தில், அரசன் சு தியேன்பௌவை தனது மருமகனாக ஆக்க அரசன் விரும்பினான். ஆனால், சு தியேன்பௌ லியிங்கைக் காதலித்தான். இதனால் கோபம் கொண்ட இளவரசி லியிங்கைக் கொல்ல நினைத்தாள்.

இளவரசி அரசனிடம் முறையிட்டாள். அரசன் முதலில் இது இரு இளைஞர்களுக்கும் இடையிலுள்ள தகராறு என நினைத்தான். ஆனால், இப்போது சாங் மிங் சு தியேன்பௌவை சிக்கவைத்தான். சு தியேன்பௌவின் தாயார் பை லியிங் ஜோங்சான் அரசனின் மகள் என்பதை அரசனுக்கு கூறினாள். ஆனாலும், அரசன் மிகவும் கோபமாக இருந்தான். அவன் ஜொங்சான் குடும்பத்தை பதவியிறக்கி சு தியேன்பௌவை கொல்லும் படி கட்டளையிட்டான்.

இருவரும் செய்த உடன்பாட்டுக்கிணங்க சு தியேன்பௌ மரண தண்டனை நிறைவேற்றும் போது, பை லியிங் வீட்டில் தற்கொலை செய்தாள். ஆனால், இளவரசி சு தியேன்பௌ கொல்லப்படுவதற்கு முன், அவனுக்கு மன்னிப்பு வழங்கி, இராஜ்சியம் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை வைத்திருந்த்தாள். ஆனால், பை லியிங் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டாள்.

1 2 3 4 5 6 7
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040