• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வீட்டு சாமங்கள்]

 

ஷன்சி ச்சியாஒவின் மாளிகைத் தொகுதி

 

இது மாகாணத் தலைநகரமான தையுவானின் இருந்து 60 கிலோமீட்டர் தெற்கிலும்12.4 மேல்பிங்யாஓவின் வடக்கே 20 கிலோமீட்டரிலும் அமைந்து இருக்கிறது.

 

இது, 1756யில் ச்சிங் வம்ச காலத்தில்1644-1911கட்டப்பட்டது. இக்கட்டிடங்கள், 1940களில் ச்சியேஓ குடும்பம் எந்தச் செல்வாக்கும் இன்றி இருந்த போதிலும் தொடர்ந்து நன்கு பராமரிக்கப்பட்டன.

 

இந்தக் குடும்பம் ச்சியன்லொங்கின் ஆட்சிக்காலத்தில் ஓர் கெளரவமான நிலையைப் பெற்று இருந்தது. ச்சியன்லொங்1735-1796இவ்வம்சத்தலைவர்களில் ஒரு புகழ்பெற்ற வர்த்தகராகவும் இருந்தார். வர்த்தகப் பயணங்களில் அவர், பல வெளிநாடுகளுக்குச் சென்றார். இக்குடும்பத்தின் பல தொழில்களில் வங்கித் தொழிலும் உண்டு. உள்ளடக்கியது. இதனால், அவர்களுடைய வர்த்தகச் செல்வாக்கு ஷான்சி மாநிலத்துக்கு அப்பால் பரவியிருந்தது. அவர்களுடைய தனியார் வங்கிகள் நாடு பூராகவும் இருக்கின்றன. மாளிகையின் உள்முற்றங்களும் பாதைகளும் இரட்டை மகிழ்ச்சி சுவான்சிஎன்ற சொல்லுக்கான சீன எழுத்துக்களை உருவாக்குவதற்கு வடிவனமக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடக்கலையானது எல்லாவற்றையும் தன்னத்தே கொண்டுள்ளது. லேசான சரிவுகளில் இருந்து அழகான வறைவுகளில் கீழே இறங்கி உச்சிகளுக்கு செல்லுகின்ற எதிரிடையான கூரைப்பாணிகளின் ஓர் பெரிய வரிசை காணப்படுகின்றது.

 

இம்மாளிகையானது 4220 சதுர கஜப்பரப்பளவில் அமைந்து இருப்பதோடு 60 பிரதான முற்றங்களையும் 20 சிறிய மாளிகைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. ஒரு வடக்குத் தெற்கு அச்சில் அமைக்கப்பட்ட 313 அறைகள் உள்ளன. 80 மீட்டர்87 கஜம் நீளமான வழிப்பாதை கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லுகிறது. இது தொகுதியினை பாதியாகப் பிரிக்கிறது. மேற்கு முனையில் சியாஒ குடும்பத்தின் பூர்வீக ஆலயம் இருக்கிறது.

 

மாளிகைத் தொகுதியானது, 10 மீட்டருக்குள்33 அடிஉயரத்தை கொண்டதும் உச்சியில் கைப்பிடி சுவர்களையும் கொத்தலங்களையும் கொண்ட சுவர்களால் சூழப்பட்டது.

 

நான்கு மூலைகள் ஒவ்வொன்றிலும் மாளிகையின் தனிப்பட்ட உலகத்தை உறுதிப்படுத்தி வாதுகாக்கின்ற பாதுகாப்புக்களை முழுமையாக்கின்ற காவல்கோபுரங்கள் உள்ளன. சுவருக்குள் இதனுடைய மூன்று பக்கத்தையும் சுற்றி ஒரு வீதி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வீதியில் இருந்து பல்வேறு கட்டிடங்களுக்குள் நேரடியாக நுழையலாம். கட்டிடங்கள் இவைகளுக்கு இடையில் ஒரே மாதிரியான வடிவமைப்புடன் 140 சிறு வழி நடைபாதைகள் ஒரு ஒழுங்கு வரிசையில் உள்ளன.

 

பிரதான நுழைவாயி்ல கிழக்குப் பக்கத்தில் ஒரு கோபுரத்துடன் விசாலமான வழியுடன் முழுமையடைகின்றது. கதவின் மேல் வாரிசுகள் நியாயமானவர்கள் சகோதரர்கள் பரஸ்பர பிரிவு காட்டுகிறார்கள். அவர்கள் குடும்பம் செழிப்படையட்டும் என்ற குடும்ப வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. வாயிலுக்கு அப்பால் நீண்ட ஆயுள் உருவம் செதுக்கப்பட்டுள்ள ஒரு திரைச்சுவர் உள்ளது. இந்த மாளிகையானது சிவப்பு விளக்குள் எழுச்சி என்ற பிரபலமான திரைப்படும் எடுக்கப்பயன்படுத்தப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040