• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[வீட்டு சாமங்கள்]

 

திரைச் சுவர்

 

வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் ஒரு மரபார்ந்த சீன வீட்டின் அறைகளின் கதவின் சற்று உள்பக்கத்திலோ வெளிப்பக்கத்திலோ பார்ப்பவரின் பார்வையில் இருந்து விலகி தனியாக்கப்பட்ட ஒரு சுவரை அவதானத்து இருக்கக்கூடும். தமிழில் இது திரைச்சுவர் என்று தெரிகிறது. இது சீன மொழியில் யீங்பி அல்லது சியேள பி என அழைக்கப்படுகிறது. இது செங்கல் மரம், கல்லு அல்லது பளபளப்பான மாபிள் போன்ரவற்றில் ஒன்றினால் செய்யப்பட்டிருக்கக்கூடும்.

 

யீங்பி குறைந்தது மேற்கே இருந்த ஜோ வம்சத்திற்கு பின்நோக்கிப் பார்க்கப்படலாம். கி.மு.11 நூற்றாண்டு-கி.மு.771தொல்லியவாளர்கள் ஷான்சியில் அண்மை ஆண்டுகளில் அந்தக்காலத்தின் சமாதிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இம்மாகாணம் ஒரு திரைச்சுவரின் எச்சங்களைக் கொண்டுள்ளது. இது 240 cm நீளத்தையும் 20 cm உயரத்தையும் கொண்டுள்ளது. இச்சுவர் சீனாவில் வரலாற்றுக்காலத்தில் இருந்த இந்த வகை சுவர்களில் காலத்தால் முந்தியதாக இருக்கிறது.

 

 

புராதன காலங்களில் யீங்பியானது தரத்தின் ஒரு குறியீடாக இருந்தது. மேற்கு ஜோவின் ஈம்க்கிரிகைகளின் முறைகளின் அடிப்படையில் அரசு மாளிகைகள், பிரபுக்களின் மாளிகைகள், மற்றும் சமய ஆலயங்கள் மட்டும் திரைச் சுவர்களைக் கொண்டிருந்தன. வழிப்போக்கன் மற்றும் முற்றத்திற்குள் இருந்து எட்டிப்பார்ப்பவர்களை விட இந்த திரைச் சுவர் விருந்தினர்களாலும் பயன்படுத்தப்பட்டது. இவர்கள் அவர்களுடைய வண்டியில் இருந்து இறங்கி சுவருக்கு பின்னால் நிற்பதற்கும், உள்ளுக்கு புகுவதற்கு முன்னர் தங்களுடைய ஆடைகளை சரிப்படுத்தவும் இதைப் பயன்படுத்தினார்கள். பின்னர் தனிப்பட்ட வீடுகள் திரைச்சுவர்களை ஆரம்பிக்கும் வரை அதிகமாக இருக்க வில்லை. எல்லாப் புராதன திரைச்சுவர்களில் அநேகமான கண்கவர் சுவர்கள் மூன்று ஆகும். ஒன்பது டிராகன் சுவர்கள் பளபளப்பான நிற்க் கற்களால் கட்டப்பட்டது.

 

இவைகளில் மிகப் பெரியது 45.5 மீட்டர் X 8 மீட்டர் X 2.02 மீட்டர் ஆகவும் இது தற்போது ஷான்சி மாகாணத்தில் த்தாதொங் நகரில் உள்ளது. இதன் ஆரம்பம் மிங் வம்சத்தின் முதலாவது சக்கரவர்த்தியான ஜூ யுவான் சாங்கின் பதின்மூன்றாவது மகனின் இளவரச மாளிகைக்கு முன்னால் இருந்தது. இதன் மீது ஏழு வித்தியாசமான கலர்களில் மேகத்தில் பற்றது கொண்டிருக்கின்ற ஒன்பது டிராகன்கள் செதுக்கப்பட்டுள்ளன.

 

மிக அற்புதமான அம் மூன்றில் ஒன்று பெய்ஜிங்கின் பெய்ஹைய் பூங்காவின் வடக்கில் இப்போது இருக்கின்றது. இது மின் வம்சத்தின் ஒரு அரண்னைக்குச் சொந்தமாக இருந்தது. இது பளபளப்பான நிற மாபிள்களைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு சத்திரம் ஆகும். இச்சித்திரம் ஒவ்வொரு பக்கத்திலும் எதிர்எதிராக ஒன்பது சுருள் டிராகன்களைக் கொண்டிருக்கின்றது. ஒரு பார்வையிடும் பயணி சுவரின் கூரை மாபிள்கள் மற்றும் கூரை ஒரங்கள் மீது மிகச் சிறிய அளவுகளில் 635 டிராகன் கறை எண்ணலாம். மூன்றாவது சுவர்களை பொர்பிடென் நகரத்தில் குவாங்ஜிமென் வாயிலுக்கு எதிரே இருக்கின்றது. இது பார்வையாளர்களுக்கு நன்றாகத் தெரிந்து இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட மூன்றும் மின் வம்சகாலத்தில் (1368-1644) கட்டப்பட்டுள்ளன. இவை எல்லாம் ஒரு முற்றத்துக்கு நுழைவாயிலின் முன்பக்கத்தில் நிறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டன. இவை கட்டிக்கலைத் தொகுதியின் ஒரு உறுப்புப் பகுதியை உருவாக்கி கட்டடங்களுக்கு அழகைச் சேர்க்கின்றன. இவைகளுக்கு இரு பக்கத்திலும் நாட்டில் வேறுபட்ட பகுதிகளில் காணப்படுகின்ற ஒன்று மூன்று அல்லது ஐந்து டிராகன்களுடன் திரைச்சுவர்கள் உள்ளன.

 

பொர்பிடென் நகரத்தின் மாளிகையின் முற்றத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு திரைச்சுவர் உள்ளது. இவை, மரத்தினால் உருவாக்கப்பட்டோ செதுக்கப்பட்ட கலவைக்கல்லினாலோ, பலிபலிப்பான மாபிள்கல்லுடன் கட்டப்பட்டதாக இருக்கின்றது. இது மாற்றமடையாமல் நல்ல அதிர்ஸ்டக்கான அடையாளத்தின் வடிவமைப்புக்களுடன் இருக்கின்றது.

 

குறிப்பிட்ட சில திசைச் சுவர்கள் சீனாவின் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்றன. இவை சுவரில் நிறம் தீட்டப்பட்டு அல்லது செங்கல்லில் செதுக்கப்பட்டோ தன் என அழைக்கப்படும். அதிசயமான மிருக உருவத்தைத் தாங்கியிருக்கிறது. உள்ளூர் மக்களின் நம்பிக்கையின் படி இந்த மிருகும் மிகவும் பேராசை கொண்டது. இது கடலில் உதிக்கும் சூரியனை விழுங்க விரும்பி நீரில் மூழ்கியது. படம் பேராசை தன்னழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை உணர்த்துகின்றது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040