பீங்கான்(பகுதி—7)

பளபளப்பான பீங்கான் பல நன்மைகளைக் கொண்டிருக்கின்றது. இது நீர் கசியாமலும் காற்றுப்புகாமலும் இருப்பதால் தட்டும் போது ஒரு தெளிவானதும் இனிமையான சத்தத்தையும் கொடுக்கின்றது. சிறிய துணுக்குகள் கூட இல்லாமல் இருப்பதால் கழுவுவதற்கு இலகுவாகவும் வழவழப்பாகவும் இருக்கின்றன.
படத்தில் உள்ள ஒயின் போத்தல், 2.5 கிலோகிராம் கொள்ளலவைக் கொண்டு கறுப்பு சிமிலியால் பளபளப்பாக்கப்பட்டு இருக்கிறது. போத்தலின் சிறிய வாயானது சிதறலைத் தடுக்கிறது. இதை சுவரில் தொங்க விடுவதற்கு வசதியாக இரண்டு வளையங்களைக் கொண்டிருக்கிறது. போத்தலின் வடிவமைப்பு உயரமானதாகவும் நேரானதாகவும் இருக்கிறது. இது உறுதியாகவும் நிலையானதாகவும் இருக்கிறது.
போத்தலின் மேல் உள்ள சீன எழுத்துக்கள் வலுவானதாகவும் நேரானதாகவும் இருப்பதுடன் இதன் வெளிப்பக்கம் மென்மையானதாகவும் உட்பகுதி கடினமானதாகவும் இருக்கிறது. வடிவமைப்பு, பளபளபாக்கல் மற்றும் எழுத்துக்கள் என்பன எளிமையாகவும் அலங்காரமற்றும் இருக்கின்றன. இது, ஒட்டும் எனுத்து முத்திரைகளைக் கொண்டுள்ளது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15