அன்புள்ள நேயர்களே, பாரம்பரிய விழாக்கள், உணவு வகைகள், ஓவியங்கள், இசை, கட்டிடவியல் முதலியவை மூலம் சீனா பற்றி மேலும் அறிந்து கொள்ளும் புதிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. சீன வானொலி ஜுலை முதல் நாள் தொடக்கம் ஆகஸ்ட் திங்கள் 31ஆம் நாள் வரை கவர்ந்திழுக்கும் சீனா எனும் பொது அறிவுப்போட்டியை நடத்த இருக்கின்றது. நண்பர்கள் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு அல்லது இணையம் மூலம் இப்போட்டியில் ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
இனி, இது பற்றிய விபரமான விதிகள்:
|
1. ஒவ்வொரு கட்டுரையிலும் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். 2. தவிர, கட்டுரைகள் எழுதுதல், சீனா பற்றி ஓவியங்கள் தீட்டுதல், சீன கையெழுத்துக் கலைப் படைப்புகளை படைத்தல், இணையம் மூலம் நீங்களே உழைத்து உருவாக்கிய ஒளிப்பதிவுகளை அனுப்புதல் முதலிய வடிவங்களில் நீங்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த ஒளிப்பதிவில், சீன இசை நாடக நிகழ்ச்சியை அரங்கேற்றுதல், சீனப் பாடல்களை பாடுதல், வூ சூ தற்காப்பு கலை அரங்கேற்றத்தில் ஈடுபடுதல், சீன பாரம்பரிய இசை கருவியை இசைத்தல், சீன உணவு வகைகளைத் தயாரித்தல் முதலியவற்றில் உங்களுடைய ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தலாம். 3. ஒவ்வொரு படைப்புகளிலும் அந்தந்த படைப்புக்களின் பெயர் அல்லது தலைப்பு, உங்களுடைய பெயர், நாடு, தொடர்பு எண், முகவரி, சுருக்கமான விளக்கம் ஆகியவை இடம்பெற வேண்டும். 4. ஒலிப்பதிவு mp3 வடிவிலும், ஒளிப்பதிவு MPEG அல்லது mp4 வடிவிலும் இருக்க வேண்டும். தவிர, ஒளிப்பதிவின் அளவு 10 நிமிடங்கள் மற்றும் 200 MBக்குள் இருக்க வேண்டும்.
போட்டியில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். சிறப்புப் பரிசு பெறும் நண்பர் சீனாவில் இலவசப் பயணம் மேற்கொள்ள அழைக்கப்படுவார்.
கவர்ந்திழுக்கும் சீனா எனும் பொது அறிவுப்போட்டியில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
|