படகில் ஏறி இந்த நகரை வலம் வரும்பொழுது பாரீஸ் ஸீன் ஆற்றில் இருப்பது போன்ற ஒரு தோற்றம். ஏனென்றால் இந்த ஊரில் கட்டிடங்களின் அமைப்பு ஐரொப்பிய, பிரெஞ்சு கட்டிடங்களின் பாணியில் அமைந்திருக்கிறது. கப்பலிலோ, படகிலோ அமர்ந்த வண்ணம், இவ்வாற்றின் இரு கரைகளிலும் அமைந்த கட்டிடங்களை ரசித்த வண்ணம் இந்த ஊரை சுற்றிப்பார்க்கலாம், இவ்வாற்றின் இரு கரையிலும், இத்தாலி மற்றும் பிரெஞ்சு ,ரஷிய பாணியில் அமைந்த கட்டடங்கள் காணப்படுகின்றன. இங்கு துலே டெம்பிள் என்று அழைக்கப்படும் ஒரு கோவில் சுமார் 1000 ஆண்டுகால பழமையுடையது. குவான்யி என்ற சந்தோஷங்களை அளிக்கும் கருணை கடவுளின் மிகபெரிய உருவச்சிலை இங்கு இருக்கிறது.
இந்த் கோவிலை சுவான்ஷாங் என்ற தாங் வம்ச வழி தோன்றிய மன்னர் கட்டினார். இந்த கோவிலில் மூன்று தலையுடன் ஆறு கைகளை உடைய புத்தர், மிக உன்னதநிலை அடைந்த பதினாரு சீடர்களுடைய உருவங்களும் இங்கு இருக்கிறது. 11 தலையுடைய குவானியின் சிலையும் இரண்டு வாயில்காப்பவர்களின் மிகப்பெரிய உருவச்சிலையும் (சீனாவில் இருக்கும் உயரமான சிலைகளில் இதுவும் ஒன்று) இங்கு இருக்கிறது.