பழைய கலாச்சார தெரு டாங்மென் என்ற இடத்தில் இருக்கிறது. இதன் 580 மீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் நடுநாயகமாக மாசுவே என்ற கோவில் இருக்கிறது. இதற்கு தியன்ஹீவா மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது. மாசுவே என்ற கடல் பெண் தெய்வத்திற்கும், சொர்கத்தின் கடவுளுக்கும் இங்கு சிலைகள் இருக்கிறது.
இங்கு பெயிண்டிங் பிரஷ், எழுதும் வரை பலகை, பிரபலமானவர்களின் பெயிண்டிங், அவர்களின் கையொப்பங்கள் இட்ட படங்கள், நிரங்ஷாங் சிற்ப சிலைகள், அவர் வரைந்த ஓவியங்கள், பழைய கால புராதான பொருள்கள்,சீன பாரம்பரிய உணவு வகைகள் எல்லாம் கிடைக்கிறது.
இங்கு பீங்கான் குடுவைகள், பூச்சாடிகளினாலேயே ஒரு மாளிகை எழுப்பியிருக்கிறார்கள். அப்பா என்ன ஒரு பிரம்மாண்ட அழகுடன் காட்சியளிக்கிறது. இந்த மாளிகையில் எல்லாமே பீங்கானாலான பூ ஜாடிகளை கொண்டே இந்த மாளிகை அமைக்கப்பட்டிருக்கிறது.