மக்காவ் சீன குடிஅரசின் சிறப்பு நிர்வாக பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். போர்த்துகீசியர்கள் 16ம் நூற்றாண்டில் இங்கு குடியேறி வியாபாரம் மேற்கொண்டனர். முதலில் இந்த நகரத்திற்கு வந்த போர்ச்சுகீசியர்கள் அடிமைகளை வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டனர். இதை சீனர்கள் எதிர்த்தனர். சீனர்களுடன் உறவை வளர்ப்பதற்க்காக , வியாபாரத்தை இங்கு வளர்ப்பதற்க்கும் அடிமை முறையை ஒழித்து படிப்படியாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். இரண்டாவது உலகப்போரின் போது சீனா ஜப்பானின் கீழே அதிகாரத்திற்குட்பட்டிருந்தாலும் மக்கா நகரம் மட்டும் ஜப்பானின் ஆதிக்கத்திற்கு உட்படவில்லை. ஒரு சுதந்திர நாடாகவே இருந்தது. இரண்டாவது உலகப்போருக்கு பின்னும் மக்கா போர்ச்சுகீசியர்களின் கையிலேயே இருந்தது. 50 வருடங்களுக்கு பின் 1999 சீனா வசம் வந்து சேர்ந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படியில் மக்காவிற்கு தன்னிச்சை அதிகாரம் வழங்கப்பட்டது. மக்காவில் சட்டம், நாணயம், வரி தன்னதிகாரத்திலும், எல்லை பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகளும் சீன அரசாங்கம் பொறுப்பேற்கிறது.
இந்த நகரத்தின் முக்கிய தொழில் சூதாட்டம் தான். இந்த விடுதிகளுக்குள் நுழைய 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். பாஸ் போர்ட் நுழைய முடியும் சரிபார்த்த பின் தான் உள்ளேயே விடுகின்றனர். மக்காவில் ஹாங்காங் டாலரையும், மக்காவ் டாலரையும், பயன் படுத்துகிறார்கள்.
1 2 3 4