வெனிஷியன் ஹோட்டலில் செயற்கையாக வெனிஸ் நகர தோற்றத்தில் படகு பயணமும் செல்லலாம். இந்த ஹோட்டலின் மேல் கூரையில் பார்த்தபோது மேலே தெரிந்த வானத்தையும் நட்சத்திரத்தையும் பார்த்து நாங்கள் ஒரு திறந்த வெளி ஹோட்டல் என்று நினைத்தால் அப்புறம் தான் தெரிந்தது அது மேற்கூரையில் வானம் நட்சத்திரங்களின் அணிவகுப்பு கலைந்து செல்லும் மேகக்கூட்டம் இதை பார்த்தவுடன் நாங்கள் அடைந்த பிரமிப்புக்கு அளவே இல்லை. இவ்வளவு தத்ரூபாமாக வரைந்திருக்கிறார்கள் எப்படி என்று கண்முன்னே இன்று வரை அந்த காட்சி தோன்றிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த கனாலில் படகு பயணம் செல்லலாம். அப்போது ஒரு இத்தாலியர் அந்த படகில் இத்தாலிய பாடல்கள் பாடிக்கொண்டே வருவார். அப்படியே வெனிஸ் தோற்றத்தை நம்கண்முன்னே நிறுத்துகிறது இந்த காட்சி.