மக்காவிற்க்கும் ஹாங்காங்கிற்கும் இடையே சுற்றூலா பார்வையாளர்களை எண்ணிக்கை என்று கடும்போட்டி நிலவுகிறது. மக்காவின் அழகு முதலில் சிங், மிங் ராஜ்ஜியங்களில் கட்டிய பழைய கோவில்களும், பிறகு போர்ச்சுகீஸின் ஐரோப்பிய பாணியிலான கட்டிடக்கலைகளின் படைப்புகளும் கலந்து இருக்கிறது.
மக்காவின் இயற்க்கை அழகு இங்கிருக்கும் கடற்கறைகள், குட்டி குட்டி தீவுகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றது. இங்கு நிலவும் தட்பவெட்ப நிலையும் ஆண்டு முழுவதும் ஒரே சீரான நிலையில் (கடுமையான் வெப்பமும் இல்லாமல், குளிரும் இல்லாமல்) இருப்பதால் இன்னும் பயணிகள் இங்கு வருவதற்க்கு விருப்பம் தெரிவிக்கின்றனர்.
டான்சிங் பவுண்டன் (நீர்கண்காட்சி), மியூஸியம் ,ரூயின்ஸ் ஆப் செயிண்ட் பால் என்ற சர்ச் பாழடைந்த கோவில் அதை சரி செய்து அப்படியே காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். ஏராளமான கோவில்கள் இங்கு இருக்கின்றது.. கருணைக்கு, செல்வத்துக்கு, மழைக்கு, என்று ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் இங்கு கோவில்கள் உள்ளன.