• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தாய்ஜிச்சுவன் மற்றும் உடல் நலப் பாதுகாப்பு
  2013-09-10 09:23:24  cri எழுத்தின் அளவு:  A A A   

பேராசிரியர் வாங் சியாவ் ஜுனுக்கு 6 வயதாக இருந்தபோது, வூ சு என்னும் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். பல புகழ்பெற்ற வூ சு வல்லுநர்களும், விளையாட்டு மருத்துவ அறிவியலாளர்களும் அவரது ஆசிரியர்களாக இருந்தனர். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட வாங் சியாவ் ஜுன் அழைப்பை ஏற்று, ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று, தாய்ஜிச்சுவன் பண்பாட்டை ஆக்கப்பூர்வமாக பரப்புரை செய்திருக்கிறார். வெளிநாட்டவர்கள் சீனப் பண்பாட்டை அறிந்து கொள்வதிலும், உலகளவில் சீனப் பண்பாட்டைப் பரப்புரை செய்வதிலும் தாய்ஜிச்சுவன் ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது என்று அவர் கருதுகிறார். அவர் கூறியதாவது:

"தாய்ஜிச்சுவன் பயிற்சி செய்வதன் மூலம், தத்துவ ரீதியில் சீன மக்கள் சிந்தனை ஓட்டத்தை வெளிநாட்டவர்கள் அறிந்துக் கொள்ள முடியும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள் இதை நன்றாக புரிந்து கொண்டால், சமூக இணக்கத்தை விரைவுபடுத்தி, தங்கள் உடல் நலத்தை மேம்படுத்தலாம். இதன் காரணமாக, உலகளவில் சுமார் 15 கோடி மக்கள் தாய்ஜிச்சுவன் பயிற்சி செய்கின்றனர்" என்றார் அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040