• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் தியன்சின் யாங் லியு சிங் படக் கலை
  2013-10-08 13:21:53  cri எழுத்தின் அளவு:  A A A   
வசந்த விழா, சீனாவின் மிக முக்கிய பாரம்பரிய திருவிழாவாகும். முன்பு, வசந்த விழாவின்போது, மகிழ்ச்சியான கொண்டாட்ட சூழ்நிலையை அதிகரிக்கும் பொருட்டு, பல்வேறு குடும்பங்களின் வீடுகளிலுள்ள கதவுகளிலும் வேறு பல இடங்களிலும் வசந்த விழா படங்கள் ஒட்டப்பட்டன. சீனாவின் வடப் பகுதியின் வசந்த விழா படங்களில், தியன்சின் யாங் லியு சிங் வசந்த விழாப் படங்கள் மிகவும் புகழ்பெற்றவை. யாங் லியு சிங் வசந்த விழாப் படங்கள், உள்ளூர் தனிச்சிறப்பு வாய்ந்தவை. நாட்டுப்புற ஓவிய அரியச் செல்வமான யாங் லியு சிங் வசந்த விழா படக்கலை, சீனாவின் தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படக் கலை, வட சீனாவின் தியன்சின் நகரப்புறத்திலுள்ள யாங் லியு சிங் வட்டத்தில் தோன்றியதாகும். இவ்வட்டத்தில் ஹோ சிங் யுவ் என்னும் இளைஞர், நீண்டக்காலமாக யாங் லியு சிங் வசந்த விழா படக்கலையின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றார். இன்றைய நிகழ்ச்சியில், ஹோ சிங் யுவ் பற்றியும், யாங் லியு சிங் வசந்த விழா படங்கள் பற்றியும் அறிமுகப்படுத்துகிறோம்.

ஹோ சிங் யுவ், யாங் லியு சிங் வட்டத்தின் "யு செங்" ஓவிய சங்கத்தின் 6வது தலைமுறை வாரிசாக திகழ்கிறார். அவர் 4 வயதிலிருந்தே தந்தையிடமிருந்து யாங் லியு சிங் மரப் பலகை மாதிரியை பயன்படுத்தி வசந்த விழா படத் தயாரிக்கும் திறனைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040