• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் தியன்சின் யாங் லியு சிங் படக் கலை
  2013-10-08 13:21:53  cri எழுத்தின் அளவு:  A A A   

அதன் பிறகு கண்காட்சி மற்றும் பரப்புரை மூலம், பழமை வாய்ந்த யாங் லியு சிங் வசந்த விழாப் படங்கள், சந்தையில் மீண்டும் படிப்படியாக அதிகமாக தொடங்கின. ஆனால் சந்தையில் ஏற்பட்ட போட்டியில், சில பிரச்சினைகள் ஏற்பட்டன. எடுத்துக்காட்டாக, படத் தயாரிப்பாளர் சிலர், பாரம்பரிய மரப் பலகை மாதிரி தயாரிப்பு முறையைப் பின்பற்றாமல், நவீன ஈயப் பலகை மாதிரியைப் பயன்படுத்தினார். அதனால் பழமை வாய்ந்த வசந்த விழாப் படக்கலை பாணி வலுவிழந்து விட்டது. ஹோ சிங் யுவால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவரது கருத்தின்படி, யாங் லியு சிங் வசந்த விழாப் படக்கலை, மரப் பலகையில் செதுக்கப்படும் படமாகும். அதன் தயாரிப்பு வழிமுறையின் பாரம்பரிய தூயத் தன்மையை நிலைநிறுத்துவது, மிகவும் முக்கியமானது. சீனாவின் மரப் பலகை மாதிரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வசந்த விழாப் படங்கள் சீனாவிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுள்ளது என்றும், இப்படங்களைத் தயாரிக்கும் வழிமுறை தனிச்சிறப்பு வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார். சீனப் பொது மக்கள் ஆசைப்படும் அம்சங்களை வெளிப்படுத்துவது, இப்படத்தின் ஈர்ப்பு ஆற்றலாகும் என்றும் அவர் தெரிவித்தார். அவரது அறிமுகத்தின்படி, படங்களைத் தயாரிக்கும்போது, மூன்று வகை வடிவங்களில் செதுக்குதல், மிக முக்கியமானது. முதலாவது, முகம் மற்றும் கை வடிவமாகும். இரண்டாவது, ஆடைகளில் உள்ள பள்ளமான வடிவமாகும். மூன்றாவது, அப்படத்தின் பின்னணி வடிவமாகும்.

கடந்த பல ஆண்டுகால முயற்சிகளுடன், சீனா முழுவதிலும், 400 வசந்த விழாப் படங்களின் மரப் பலகை மாதிரிகளை ஹோ சிங் யுவ் சேகரித்துள்ளார். அவற்றில், தனி மரப் பலகை மாதிரிகளின் எண்ணிக்கை, நூறைத் தாண்டுகிறது. தற்போது, ஹோ சிங் யுவ்வின் தியன்சின் நகரிலுள்ள வீடு, ஓரே ஒரு குடும்பப் பணிமனை கண்காட்சி அரங்காக உருவாக்கப்பட்டுள்ளது. அவர் சேகரிக்கும் மரப் பலகை மாதிரிகளும் பழமைவாய்ந்த படங்களும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், ஹோ சிங் யுவ், பல வசந்த விழா படங்களை அவராகவே வடிவமைத்து செதுக்கியுள்ளார். 200 சதுர மீட்டர் நிலப்பரப்புடைய அரங்கில், காட்சிப் பொருட்கள் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கு மக்களுக்கு திறந்து வைக்கப்பட்ட பின், ஹோ சின் யுவ் எந்த விளம்பரத்தையும் செய்யாத போதிலும், இவ்வரங்கிற்கு வரும் மக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040