பொது மக்களிடையே உருவாகிய குன் ச்சு கலை, அழகான, மறுமலர்ச்சி வாய்ந்த பாணியுடன், இதர எளிமையான இசை நாடக வடிவங்களைத் தாண்டி, கலையுலகின் உச்ச நிலைக்கு சென்றது. ஆனால் சிங் வம்சத்தின் இடைக்காலத்துக்கு பிறகு, குன்ச்சு கலை நாளுக்கு நாள் முந்தைய உயிராற்றலை இழந்து, வீழ்ச்சியடையத் துவங்கியது மக்களுக்கு வருத்தம் அளித்தது. குன் ச்சு கலையின் செழுமை, அதிகமான எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களின் பெரும் முயற்சிகளிலிருந்து பிரிக்கப்பட முடியாதது. Tang Xian Zu, Li Yu, Hong Sheng, Kong Shang Ren முதலிய அறிவார்ந்த பிரமுகர்கள் இயற்கை எய்திய பின், குன் ச்சு கலை முன்னென்றும் கண்டிராத உயிராற்றல் இழந்த நிலை அடைந்தது. முந்தைய காலத்தின் குன் ச்சு கலைஞர்களை விட, பின்வருவோரின் கலை திறமை பின்தங்கியே இருந்தது. அவர்கள் நாளுக்கு நாள் விட்டுக்கொடுக்காத, வளர்ச்சியற்ற ஒழுங்குகளின்படி, குன் ச்சு இசை நாடகப் படைப்புகளை இயற்றுவதில் ஈடுபட்டனர். ஒரே மாதிரியான, புதுமையற்ற படைப்புகளை இயற்றினர்.



