• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் குன் ச்சு இசை நாடகத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
  2013-11-12 08:57:09  cri எழுத்தின் அளவு:  A A A   

தவிர, சிங் வம்சத்தின் நாட்டுப்புற அரங்கேற்றக் கலைஞர்கள், நன்கு தெரிந்த குறுகிய இசை நாடகப் படைப்புகளையும், ராணுவ இசை நாடகப் படைப்புகளையும் சிறப்பாக இயற்றினர். இந்த புதிய இசை நாடகப் படைப்புகள், பாரம்பரிய இசை நாடகப் படைப்புகளுடன் ஓரே அரங்கில் அரங்கேற்றப்பட்டன. இவை வாழ்க்கை சுவையை கொண்டாடும் கோலாகலமான அம்சங்கள் வாய்ந்தவை. மறுமலர்ச்சியான, மகிழ்ச்சி தரும் இந்த இசை நாடகங்கள், அக்காலத்தின் இரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன. சிங் வம்சத்தின் இடைக்காலத்துக்கு பிறகு, பாரம்பரிய இசை நாடகப் படைப்புகள் இடம்பெறும் Zhe Zi Xiஐயும், புதிதாக இயற்றப்பட்ட குறுகிய இசை நாடகப் படைப்புகளையும் சார்ந்து, குன்ச்சு இசை நாடகத் துறையில் உயிராற்றல் நிலை தொடர்ந்தது. பல்வேறு பிரதேசங்களின் இசை நாடகங்களுடனான போட்டியில், இக்கலை மீண்டும் புத்துயிர் பெற்றது.

மறுபுறம், அரங்கேற்றப் போட்டியில், குன்ச்சுவின் கலைத் தனிச்சிறப்புகள் பல்வேறு பிரதேசங்களின் இசை நாடகங்களில் சேர்க்கப்பட்டன. இது, பிரதேச இசை நாடகங்களின் செழுமையையும், பீக்கிங் இசை நாடகம் உருவாகுவதையும் விரைவுபடுத்தியது. புதிதாக வளர்ந்து வந்த பீக்கிங் இசை நாடகம், குன் ச்சுவின் ஒரு சில வடிவங்களையும், பண்ணிசைப்பகுதிகளையும் கையேற்றியது. பெருமளவில் குன் ச்சுவின் கதாபாத்திர வகைப்பாடு மற்றும் அரங்கேற்ற வடிவத்தையும் பின்பற்றி, குன் ச்சு இசை நாடக மொழி எளிதில் புரியாத குறையை மாற்றி, இரசிகர்களின் பாராட்டை வென்றது. பின்னர், பீக்கிங் இசை நாடகம், குன் ச்சு இசை நாடகத்துக்குப் பதிலாக, சீன இசை நாடக அரங்கில் இன்னொரு முக்கிய இசை நாடக வடிவமாக மாறியது.

நேயர்களே, "சீனாவின் குன் ச்சு இசை நாடகத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040