• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் சிறுபான்மை தேசிய இனப் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள்
  2014-01-09 10:09:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 433 சிறுபான்மை தேசிய இன மரபுச் செல்வங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தாள் கத்தரிப்புப் படைப்புகள், சிற்பங்கள், ஒவியங்கள், இலக்கியம், காவியங்கள், தாள் அச்சு, தேயிலை தயாரிப்பு செய்முறை, சிறுபான்மை தேசிய இன இசைக் கருவிகள் ஆகிய பல பொருட்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டன. சீனாவின் சிறுபான்மை தேசிய இன பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களை பன்முகங்களிலும் காட்சிக்கு வைக்கும் கண்காட்சி இதுவாகும் என்று இக்கண்காட்சியை ஏற்பாடு செய்யும் தரப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் சிறுபான்மை தேசிய இனங்களின் செழிப்பான பண்பாட்டு மரபுச் செல்வங்களை மேலதிக மக்களை புரிந்து கொள்ள வேண்டும் செய்வதும், சிறுபான்மை தேசிய இனங்களின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களை பராமரிக்கும் மற்றும் பாதுகாக்கும் பணிகள் மீதான பல்வேறு சமூகத் துறையினரின் கவனத்தையும், ஆதரவையும் நாடுவதும் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்யும் தரப்பின் நோக்கமாகும்.

சீனாவில் 56 தேசிய இனங்கள் உள்ளன. ஒவ்வொரு தேசிய இனமும் தனிச்சிறப்பு வாய்ந்த வரலாற்றையும் பண்பாடுகளையும் கொண்டுள்ளது. நவீனச் சமூக பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி, மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை மாற்றி வருவதால், சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த சில பண்பாடுகள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040