சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு, கடந்த சில ஆண்டுகளில், தலைசிறந்த சிறுபான்மை தேசிய இனப் பண்பாடுகளைப் பாதுகாக்க சீனா பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, யூ கு (Yu Gu)இனப் பண்பாடு மீதான பாதுகாப்புப் பணியை கூறலாம். சீனாவில் யூ கு இனத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 11 ஆயிரமாகும். இவ்வினத்துக்கு மொழி உண்டு. ஆனால் எழுத்துக்கள் இல்லை. மக்கள் தொகை குறைந்த இந்த சிறுபான்மை தேசிய இனத்தின் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில், கடந்த பத்தாண்டுகளில் கான் சு மாநிலத்தின் சு நான் மாவட்டத்தின் தொடர்புடைய வாரியங்கள், பல நூறு ஆயர்களின் குடும்பங்களில் கள ஆய்வு மேற்கொண்டன. யூ கு இனம் வாய்வழி அடுத்த தலைமுறைக்கு பரப்பி வரும் இலக்கியப் படைப்புகள், நாட்டுப்புறப்பாடல்கள், மொழி உள்ளிட்ட பண்பாட்டு மரபுச் செல்வங்களும், இம்மரபுச் செல்வங்களின் வாரிசுகளை ஒளிப்பதிவுச் செய்வது, ஒலிப்பதிவு நடத்துவது உள்ளிட்ட அடிப்படை கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன. "அழியும் ஆபத்தில் இருக்கும் சீனச் சிறுபான்மை தேசிய இன மொழிகளின் பாதுகாப்பு திட்டப்பணியில்" யூ கு இன மொழி சீனப் பண்பாட்டு அமைச்சகத்தால் சேர்க்கப்பட்டுள்ளது. யூ கு இனத்தின் நாட்டுப்புறப் பாடல்கள், ஆடைகள், திருமண பழக்க வழக்கங்கள் ஆகியவை, சீனாவின் தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புப் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.