• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சின்ச்சியாங்கின் முகாமு கலை 1
  2014-02-07 15:17:53  cri எழுத்தின் அளவு:  A A A   
நேயர்களே, 3வது சீனச் சின்ச்சியாங் பன்னாட்டு நடன விழா, சீனச் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி, கொர்லா(Korla), Shi He Zi ஆகிய மூன்று இடங்களில் அண்மையில் செவ்வனே நடைபெற்றது. இந்நடன விழாவின்போது, தனிச்சிறப்பு வாய்ந்த உய்கூர் இன 12 முகாமு கலை அரங்கேற்றம், சீன மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு கிளர்ச்சியூட்டியது. மகிழ்ச்சி தரும் தாளம், உரத்த பாடல் ஒலி, அழகான நடனம், அரங்கேற்றுபவரின் முகப்பாவனை ஆகியவை பார்வையாளர்களை மனமுருகச் செய்தன.

முகாமு, ஒழுங்குப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்ட குறிப்பிட்ட இசைத் தொடரின் சிறப்புப் பெயராகும். உய்கூர் இனத்தின் 12 முகாமு கலை, சீனத் தேசத்தின் ஒளிவீசும் பண்பாட்டுக்கு உய்கூர் இன மக்கள் ஆற்றிய முக்கிய பங்குகளாகும். 12 முகாமு கலை, இசை, இலக்கியம், நடனம், இசை நாடகம் உள்ளிட்ட பல்வகை மொழிகள் மற்றும் கலை வடிவங்கள் மூலம், உய்கூர் இன மக்களின் செழிப்பான வாழ்க்கையையும், அவர்களின் உன்னத பண்புகளையும் வெளிப்படுத்துகிறது. தவிர, இது அவர்களின் இலட்சியம் மற்றும் ஆசையையும், அப்போதைய வரலாற்றுக் காலத்தில் இவ்வின மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது.

சின்ச்சியாங்கின் Sha Che மாவட்டம், 12 முகாமு கலையின் ஊர் என அழைக்கப்படுகிறது. Sha Che மாவட்டத்தின் 12 முகாமு கலையின் கோலாகலமான பண்பாட்டுச் சுவையை உணர்ந்து கொள்ள, அண்மையில் எமது செய்தியாளர் Sha Che மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040