தற்போது, முகாமு கலை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசின் கவனத்தை மென்மேலும் ஈர்த்து வருகிறது. 2005ஆம் ஆண்டு, முகாமு கலை, யுனேஸ்கோவின் "மனித குலத்தின் வாய்வழி மற்றும் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ மாதிரி படைப்புகளின்" பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதற்கு பின் அபுதுசெரேடி ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அரங்கேற்றியிருக்கின்றார். முகாமு கலை, இந்நாடுகளின் பொது மக்களிடையில் வரவேற்பைப் பெற்றுள்ளது. Sha Che மாவட்டத்தின் 12 முகாமு கலை, பன்னாட்டு அரங்கில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியது.
முகாமு கலை, உள்ளூர் மக்களின் சிந்தனை, உணர்வு, உயிர் மற்றும் ஆத்மா ஆகியவற்றைப் பாராட்டும் இசையாகும். 12 முகாமு கலையைக் கேட்டு இரசிப்பது, உய்கூர் இன மக்களின் ஆன்மீக காவியத்தைப் படிப்பது போலாகும். உள்ளூர் மக்களைப் பொறுத்த வரை, முகாமு ஒரு மறைபொருள் பாடலாக விளங்குகிறது. அவர்களின் மனதில் முகாமு மிகவும் முக்கியமான இடம் வகிக்கின்றது. Sha Che மாவட்டத்தில், முகாமு கலையை அரங்கேற்றும் தேனீரகங்கள் மிக அதிகம். Sha Che மாவட்டத்துக்கு அருகில் உள்ள காஷ், யிங்கிஷா ஆகிய இடங்களில் வாழும் மக்கள், முகாமு கலையைக் கேட்டு ரசிக்க, இந்த தேனீரகங்களுக்கு அடிக்கடி வருவதுண்டு. அவர்கள் இங்கே இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருந்த பிறகு, சொந்த ஊர் திரும்புவதுண்டு என்று அபுதுசெரேடி தெரிவித்தார்.
நேயர்களே, "சின்ச்சியாங்கின் முகாமு கலை"பற்றிய கட்டுரையின் முதலாவது பகுதியை கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது. அடுத்த வாரம் இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி தொடரும் கேட்க. தவறாதீர்கள். வணக்கம் நேயர்களே!