• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சின்ச்சியாங்கின் முகாமு கலை 1
  2014-02-07 15:17:53  cri எழுத்தின் அளவு:  A A A   

Sha Che மாவட்டத்தில் 80 விழுக்காட்டினரால், முகாமு பாடல்களைப் பாட முடியும். இம்மாவட்டத்தின் முகாமு சதுக்கம், மக்களின் கவனத்தை ஈர்க்கும் இடமாகும். இச்சதுக்கத்தின் வாயிலில் புகழ்பெற்ற 12 முகாமு கலைஞர் அமன்னிஷாஹன் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சதுக்கத்தில் முகாமு பண்பாட்டு மையமும், முகாமு நாடக அரங்கமும் அமைந்துள்ளன. Sha Che மாவட்டத்தின் முகாமு பண்பாட்டு மையத்தின் தலைவர் யிரிஹாம் ரெயிம் பேசுகையில், முகாமு சதுக்கத்தின் மொத்த நிலப்பரப்பு சுமார் 80 ஆயிரம் சதுர மீட்டராகும் என்றும், இச்சதுக்கத்தைக் கட்டியமைக்க இரண்டு கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் விவரித்தார்.

யிரிஹாம் ரெயிமின் அறிமுகத்தின்படி, Sha Che மாவட்டத்தில், 80 வயதான முதியோர் முதல், 8 வயதான குழந்தைகள் வரை பொது மக்கள், 12 முகாமு அரங்கேற்றத்தில் பங்கெடுக்க முடியும். இம்மாவட்டத்தில் உள்ள மக்கள் ஓய்வு நேரத்தின் போது, பூங்காவுக்குச் சென்று, முகாமு அரங்கேற்றத்தில் கலந்துக் கொள்கின்றனர். சிலர், தங்கள் இசைக் கருவிகளை கொண்டு வந்து, அரங்கேற்றுகின்றனர். 2003ஆம் ஆண்டு முதல், Sha Che மாவட்டத்தின் முகாமு கலைக்குழுக்கள், இம்மாவட்டத்தில் உள்ள பூங்காக்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலவசமாக அரங்கேற்றி வருகின்றன. 2006ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள், முகாமு விழாவாக கொண்டாடப்படுகிறது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040