Thursday    Apr 10th   2025   
• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சின்ச்சியாங்கின் முகாமு கலை 2
  2014-02-11 09:13:38  cri எழுத்தின் அளவு:  A A A   
அன்பான நேயர்கள். கடந்த வாரத்தின் சீனப் பண்பாட்டு நிகழ்ச்சியில்,"சின்ச்சியாங்கின் முகாமு கலை" பற்றிய கட்டுரையின் முதலாவது பகுதியைக் கேட்டீர்கள். இன்றைய நிகழ்ச்சியில், கடந்த வார தொடர்ச்சியைக் கேட்டு இரசியுங்கள். அறிவிப்பாளர் தமிழன்பன்.

65 வயதான மாமுதிதாஷ், Sha Che மாவட்டத்தின் ஒரு விவசாயி ஆவார். சிறு வயதிலிருந்தே அவர் முகாமு கலையை நேசித்து வருகிறார். அவருக்கு 15 வயதாக இருந்தபோது, அவர் முகாமு கலையைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். தனது அரங்கேற்ற நிலையை உயர்த்தும் வகையில், கடந்த பல ஆண்டுகளாக, அவர் இன்னல்களைச் சமாளித்து, பத்துக்கு அதிகமான கிலோமீட்டர் தொலைத்தூரத்திற்கு போய் வந்து, "முகாமு தேனீரகத்தில்" முகாமு கலைஞர்களிடமிருந்து முகாமு அரங்கேற்றத் திறனைக் கற்றுக்கொண்டு வருகிறார். 12 முகாமு, மிக பெரிய சுற்று ஆகும். அதற்கு சிக்கலானக் கட்டமைப்பு உள்ளது. அதனால், திறமையுடைய முகாமு கலைஞரைச் சந்திக்கும் போதெல்லாம், தனக்கு கற்றுக்கொடுக்குமாறு அக்கலைஞரிடம் மாமுதிதாஷ் வேண்டுகோள் விடுப்பார்.

Sha Che மாவட்டத்தின் முகாமு பண்பாட்டு மையத்தின் தலைவர் யிரிஹாம் ரெயிமின் அறிமுகத்தின்படி, தற்போது, Sha Che மாவட்டத்தில், சுமார் ஆயிரம் முகாமு கலைஞர்கள் இருக்கின்றனர். அவர்களில் இருவர் தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசாக இருக்கின்றனர். 20 பேர் மாவட்ட நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசாக இருக்கின்றனர். மாவட்ட நிலை வாரிசுகளும் தேசிய நிலை வாரிசுகளும் திங்கள்தோறும் 800 யுவான் ஊதியம் பெறலாம்.

<< 1 2 3 4 >>
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040