• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சின்ச்சியாங்கின் முகாமு கலை 2
  2014-02-11 09:13:38  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஹன் வம்சத்தின்போது, Sha Che மாவட்டம், சி யூ பிரதேசத்தின் உயர் தலைவரின் ஆட்சியின் கீழ் வந்தது. வரலாற்றுப் போக்கில், இம்மாவட்டம், Sha Che நாடு, Qu Sha நாடு மற்றும் Ye Er Qiang நாடாக இருந்தது. Sha Che மாவட்டத்தில், மக்கள் 12 முகாமு பற்றி குறிப்பிட்டதும், அமன்னிஷாஹன் என்ற மங்கை நினைவுபடுத்துகின்றனர். வரலாற்றுத் தகவலின் பதிவின்படி, அமன்னிஷாஹன் சிறு வயதிலிருந்தே இசையையும், கவிதையையும் நேசித்தவர். அவருக்கு 13 வயதாக இருந்தபோது, மன்னர் தகுநிலையை மறைத்து விட்டு பயணம் மேற்கொண்ட Ye ER Qiang நாட்டின் மன்னர் அபுதுரெசிடியை சந்தித்தார். இசையையும், இலக்கியத்தையும் நேசித்த அபுதுரெசிடி, அமன்னிஷாஹனின் தலைசிறந்த முகாமு அரங்கேற்றத் திறனால் ஆழமாக ஈர்க்கப்பட்டார். விளைவு, அவர் அமன்னிஷாஹனைத் திருமணம் செய்தார். Ye Er Qiang நாட்டின் இளவரசியாக மாறிய பிறகு, அப்போதைய பொது மக்களிடையே பரவி வந்த முகாமு கலையைத் தொகுக்குமாறு பல புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள், பாடகர்கள், கவிஞர்கள் ஆகியோருக்கு அமன்னிஷாஹான் அழைப்பு விடுத்தார். அதற்கு பின், முகாமு கலையின் உள்ளடக்கமும், அரங்கேற்ற வடிவமும் மேலும் செழிப்பாகி விட்டன. தொகுக்கப்பட்ட முகாமு கலையில், இசை, நடனம், பாடுதல், இலக்கியம், வாழ்க்கை பழக்கவழக்கம் ஆகியவை ஒன்றிணைந்துள்ளன. முகாமு இசையின் தாளம் மிகவும் இனிமையாக இருக்கிறது. இது பொது மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. உய்கூர் இனத்தின் 12 முகாமு கலையில், 12 இசைச் சுற்றுகளைச் சேர்ந்த 365 இசைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இசைச்சுற்றையும் பாடினால், குறைந்தது 2 மணி நேரம் தேவைப்படும். அப்படியானால் அனைத்து 12 இசைச் சுற்றுகளையும் பாடி முடிக்க, 24 மணிநேரம் தேவைப்படுகின்றன.

உள்ளூர் உய்கூர் இனப் பொது மக்களிடையே முகாமு கலை வளம் மிகவும் செழிப்பாக இருக்கிறது என்று யிரிஹாம் ரெயிம் தெரிவித்தார். பாரம்பரியம் மற்றும் அறிவியலை மதிக்கும் கோட்பாட்டின்படி, அவர் உள்பட பல நாட்டுப்பறக் கலைஞர்கள், முகாமு கலை வளத்தை தொடர்ந்து சேகரிப்பர். இது உண்மையில் அரசி அமன்னிஷாஹன் மேற்கொண்ட பணியைத் தொடர்வதாகும். அவரது கனவு பற்றி யிரிஹாம் ரெயிம் பேசுகையில், 24 மணிநேரத்தில் முகாமு பாடல்களைப் பாடி முடிப்பது என்ற கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பிக்க அவர் விரும்புகிறார்.

நேயர்களே, "சின்ச்சியாங்கின் முகாமு கலை"பற்றிய கட்டுரையின் இரண்டாவது பகுதியை கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது. அடுத்த வாரம் இதே நிகழ்ச்சியில் சந்திப்போம். வணக்கம். நேயர்களே!


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040