• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவங்கம்:கோதுமை மாவு ரொட்டி
  2014-03-04 10:35:48  cri எழுத்தின் அளவு:  A A A   

தமிழன்பன்.....சரி, நாம் ரொட்டியை சமைக்கப் போகின்றோம்.

கலை..... கோதுமை மாவை மறுப்படி நன்றாக பிசைந்து சம அளவில் சிறிய துண்டுகளாக அல்லது உருண்டைகளாக பிரிக்க வேண்டும்.

தமிழன்பன்.....அதேவேளையில் இரண்டு மாவு துண்டுகளை மடிக்க வேண்டும்.

கலை.....மடிப்பதற்கு முன் ஒரு பக்கத்தில் எண்ணெண் தடவிய பிறகு மற்றொரு மாவு துண்டை மடித்து ரொட்டியாக விரிவாக்குங்கள்.

தமிழன்பன்.....தனித்தனியாக இரண்டு மாவு துண்டுகளை மடித்து விரிவாக்குங்கள்.

கலை.....மாவு துண்டை விரிவாக்கும் போது அடுப்பில் வாணலியை வைத்து மெல்லிய தீயில் சூடாக்க வேண்டும். வாணலியின் மேல் கையை வைத்து வெப்பமாக உணரும்போது ரொட்டியைத் தனித்தனியாக போட்டு வாணலியை மூடுங்கள்.

தமிழன்பன்.....ஒரு ரொட்டி வெந்ததை உணர்த்த புகை அல்லது நீராவி வரும் போது ரொட்டியை திருப்பிப் போடவேண்டும்.

கலை.....மறுபக்கமும் அதேபோல் வேகும்போது ரொட்டி தயார். பாத்திரத்தில் வைப்பதற்கு முன் வாணலியில் நேரடியாக இரண்டு மடங்குகளை கொண்ட ரொட்டியை பாதியளவில் பிரித்து பாத்திரத்தில் அடுப்பு அளவில் வையுங்கள்.

தமிழன்பன்.....இப்படியே ரொட்டிகள் முழுதும் தயாரிக்கப்பட்ட பின் சாப்பிட தயார்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040