• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன உணவரங்கம்:வெள்ளரிக்காய் தோல் தொடுக்கறி
  2014-03-18 11:27:45  cri எழுத்தின் அளவு:  A A A   

தமிழன்பன்.....சமைப்பதற்குத் தேவைப்படும் பொருட்கள் தயார். சமைக்கப் போகலாமே.

கலை.....வாருங்கள். முதலில் வெள்ளரிக்காயைச் சுத்தம் செய்து 5 சென்டி மீட்டர் அளவில் துண்டுத்துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு சிறிய கத்தியைக் கொண்டு வெள்ளரிக்காய் தோலை சீவுங்கள்.

தமிழன்பன்..... பெரிய கிண்ணத்தில் வைத்து அவற்றின் மேல் உப்பு மற்றும் சர்க்கரையை தூவி 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

கலை.....காத்திருக்கும்போது கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் குடை மிளகாயைத் தனித்தனியாக சுத்தம் செய்து 8 சென்ட் மீட்டர் அளவில் மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

தமிழன்பன்.....கொதிக்கின்ற தண்ணீரில் அவற்றைக் கொஞ்ச நேரம் வேகவைத்து, பிறகு குளிர் நீரில் போட்டு ஆறிய பின் தட்டில் வையுங்கள்.

கலை.....காய்ந்த சிவப்பு மிளகாயைச் சிறிய துண்டுகளாக்கி தட்டில் வையுங்கள்.

தமிழன்பன்.....ஊறவைத்த வெள்ளரிக்காய் தோலிலிருந்து வெளியேறும் நீரை அகற்றி, ஒவ்வொரு தோலையும் மேற்கூறிய கேரட், சர்க்கரை கிழங்கு மற்றும் இனிப்பு மிளகாய் துண்டை சேர்த்து உருட்டி தட்டில் அடுக்கி வையுங்கள்.

கலை.....பிறகு வாணலியை சூடாக்கி உணவு எண்ணெய் 60 விழுக்காடு சூடாகிய பின் காய்ந்த சிறிய மிளகாய் துண்டுகளைப் போட்டுத் சற்று வதக்கிய பின் வெளியெடுத்து சிறிய கரண்டியை கொண்டு இந்த மிளகாய் எண்ணெயை வெள்ளரிக்காய் தோல்களின் மேல் தூவுங்கள்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040