சீனாவில் நகரமயமாகி வரும் போக்கில், கிராமப்புறப் பண்பாடுகளில் பெருமளவில் தொழிலமயமாகி சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் விளைவாக, சீனாவின் கிராமப்புறப் பண்பாடுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், சீனப் பண்பாட்டுத் துறையைச் சேர்ந்த சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி உறுப்பினர்கள் உயர்வாக கவனம் செலுத்தும் பிரச்சினை இது. 2013ஆம் ஆண்டு சீனாவின் இரு பெரிய கூட்டத்தொடர்கள் நடைபெற்றபோது, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி உறுப்பினரும், சீன பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பணியகத்தின் முன்னாள் துணைத் தலைவருமான தியன் சிங் சீன வானொலி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். தற்போது சீனக் கூறப்படும் பாரம்பரியப் பண்பாடுகளில், பெரும்பாலானவை வேளாண் நாகரிகத்திலிருந்து வருகின்றன. ஏறக்குறைய அனைத்து பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களும், கிராமப்புறப் பண்பாடு மற்றும் உள்ளூர் பிரதேசப் பண்பாடு ஆகும். இவை வேளாண் சமூகத்தின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறையுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளன. நகரமயமாகுதல், சீனர்கள், கிராமப்புறப் பண்பாட்டிலிருந்து பிரிந்து வருவதை பொருட்படுத்துகின்றது.
<< 1 2 3 4 >>