• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் கிராமப்புறப் பண்பாட்டு பாதுகாப்பு
  2014-03-19 16:34:55  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த சில ஆண்டுகளில், சீனப் பண்பாட்டு அமைச்சகம், நிதியுதவியை அதிகரித்து, கிராமப்புறங்களில் பரவியுள்ள பல்வகை வாய் வழி இலக்கியம், நாட்டுப்புற இசை நாடகம் உள்ளிட்ட பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களைப் பாதுகாத்துள்ளது. மறுபுறம், கிராமவாசிகள் நகரங்களில் குடிபெயர்ந்துள்ளனர். அதிகமான விளை நிலங்கள் பயன்படுத்தப்படவில்லை. கிராமப்புறத்தில் உருவாகிய பெரும்பாலான பாரம்பரியப் பண்பாடு அதன் ஆனி வேரை இழந்துள்ளது. பாரம்பரியப் பண்பாடு மீதான பாதுகாப்பு அதிக பயன்களைப் பெறவில்லை. இது பற்றி பேசுகையில் கிராமப்புறப் பண்பாட்டைப் பாதுகாக்க, கிராமக் கொள்கையின் ஒட்டுமொத்த சீர்திருத்தத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி உறுப்பினரும், சிங்குவா பல்கலைக்கழகத்தின் மானிடவியல் துறைப் பேராசிரியருமான வாங் ஹூய் கருத்துத் தெரிவித்தார்.

2003ஆம் ஆண்டு சீனாவின் குன் ச்சு இசை நாடகம், கு சின் என்னும் சீனாவின் மிக பழமை வாய்ந்த இசைக் கருவி ஆகியவை, யுனேஸ்கோ அமைப்பால், "மனித குலத்தின் வாய் வழி மற்றும் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில்" சேர்க்கப்பட்டன. இது சீன மக்களிடையே சீனப் பண்பாடு மீதான பேரார்வத்தை எழுப்பியுள்ளது. பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மீதான சீன அரசின் ஒதுக்கீட்டு அதிகரிப்பை இது குறிப்பிட்ட அளவில் தூண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புக்கான சீன அரசின் ஒதுக்கீட்டுத் தொகை, மடங்குகளாக அதிகரித்துள்ளது. தொடர்புடைய சட்டங்கள் வெளியிடப்பட்டு, தொடர்புடைய கொள்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு துறையில் இது பற்றி அறிந்து கொள்ளலாம், 2011ஆம் ஆண்டு ஜுன் திங்கள் முதல் நாள், "பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வச் சட்டம்" நடைமுறைக்கு வரத் துவங்கியது. 2010ஆம் ஆண்டு வரை, பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புக்கு சீன மத்திய அரசு சுமார் 170 கோடி யுவானை ஒதுக்கீடு செய்திருந்தது. 2012ஆம் ஆண்டுக்கு பின், பொருள் சாராப் பண்பாட்டுப் பாதுகாப்பாக ஆண்டுதோறும் 60 லட்சம் முதல் ஒரு கோடி யுவான் வரையான உதவித்தொகையை ஒதுக்கீடு செய்யும் என்று குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசம், ஹு நான் மாநிலம் உள்ளிட்ட பத்துக்கு அதிகமான மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. தேசிய நிலை, மாநில நிலை மற்றும் நகர நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகள் தொடர்புடைய கொள்கையின் ஆதரவுடன், ஆண்டுதோறும் 5000 முதல் 20 ஆயிரம் யுவான் வரையான உதவித்தொகையைப் பெறலாம்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040