• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து இனத்தவரின் வண்ணமயமான ஆடைகள் 1
  2014-03-26 09:59:41  cri எழுத்தின் அளவு:  A A A   
து இனம், சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாகும். இது வரை து இனத்தவரின் ஆடைகள், அவ்வினத்துக்கே சொந்தமான செழிப்பு மிக்க தனிச்சிறப்புகளை இன்னும் நிலைநிறுத்தி வருகின்றன. மகிழ்ச்சியான விழாக்களின் போது, ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்ற து இன மக்கள், வண்ணமயமான ஆடைகளை அணிகின்றனர். அப்போது காண கிடைக்கும் காட்சிகள், து இனத்தவரின் வீட்டின் தோட்டத்தில் வானவில் விழுந்தது போல் உணரச் செய்கின்றன. இன்றைய சீனப் பண்பாடு நிகழ்ச்சியில், சிங்காய் மாநிலத்தின் ஹு ட்ச்சு (Hu Zhu)மாவட்டத்துக்குச் சென்று, து இன ஆடைகளின் தனிச்சிறப்புகளை அறிந்து கொள்வோமா?

து இனம், சிங்காய் பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்கின்ற 6 தேசிய இனங்களில் ஒன்றாகும். து இனத்துக்கு தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாடு உண்டு. சிங்காய் மாநிலத்தின் ஹு ட்ச்சு மாவட்டம், சீனாவின் ஒரே ஒரு து இனத் தன்னாட்சி மாவட்டமாகும். இம்மாவட்டம், "து இனத்தின் ஊர்" மற்றும் "வானவில் ஊர்" என போற்றப்படுகிறது. தற்போது சுமார் 70 ஆயிரம் து இனத்தவர்கள் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர். சிங்காய் மாநிலத்தின் மின் ஹே (Min He), டா துங் (Da Tong), லே து (Le Du), துங் ரென் (Tong Ren) ஆகிய மாவட்டங்களிலும், து இன மக்கள் சிலர் வாழ்கின்றனர். தவிர, கான்சு மாநிலத்தின் தியென் ட்ச்சூ (Tian Zhu), யோங் தெங் (Yong Deng)மற்றும் ட்ச்சோ நி(Zhou Ni)மாவட்டங்களிலும், 40 ஆயிரத்துக்கு மேலான து இனத்தவர்கள் வாழ்கின்றனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040