• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து இனத்தவரின் வண்ணமயமான ஆடைகள் 1
  2014-03-26 09:59:41  cri எழுத்தின் அளவு:  A A A   

Qiao Zhi Minகின் அறிமுகத்தின்படி, து இனம் வாழும் பிரதேசத்தில் ஆடைகள், கிழக்குப் பகுதி ஆடைகள், மத்திய பகுதி ஆடைகள் மற்றும் மேற்குப் பகுதி ஆடைகள் ஆகிய மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. து இன மக்கள், கிழக்குப் பகுதி ஆடைகளை, ஃப்லன்னோரி ஆடைகள் என அழைக்கின்றனர். மத்திய பகுதி ஆடைகளை, ஹாராச்சி ஆடைகள் என அழைக்கின்றனர். நான் வாழும் பிரதேசத்தில் மக்கள் ஹராச்சி ஆடைகளை அணிகின்றனர். மேற்குப் பகுதி ஆடைகளை, தெவார்டோரோகெய் ஆடைகள் என அழைக்கின்றனர். இந்த வகை ஆடைகள், ஹெ சி மங்கோலிய இன மக்களின் ஆடைகளையும், கான்சு மாநிலத்தின் யு கு இன ஆடைகளையும் போன்றவை. து இன ஆடவரும், மகளிரும் வேறுபட்ட ஆடைகளை அணிகி்ன்றனர். து இன மக்கள் கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் வேறுபட்ட ஆடைகளை அணிந்து வருகின்றனர். தவிர, நடுத்தரவயதினர் மற்றும் முதியோர் ஒரு வகை ஆடைகளையும், இளம் வயதினர் மற்றும் வயதுவந்தோர், வேறு ஒரு வகை ஆடைகளையும் அணிவது வழக்கம் என்று அவர் கூறினார்.

Qiao Zhi Minகின் அறிமுகத்தின்படி, து இன ஆடைகளில், நவீன ஆடைகளும், பண்டைக்கால ஆடைகளும் உள்ளன. அன்றாட வாழ்க்கையில், பண்டைக்கால ஆடைகளில் பெரும்பாலானவை அழிந்து விட்டன. ஆனால் அரங்கிலும், சுற்றுலா நடவடிக்கையிலும், து இனத்தின் பாரம்பரிய ஆடைப் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இப்பாரம்பரிய ஆடைகளை காணலாம். எடுத்துக்காட்டாக, திருமணத்தின் போது, மணமக்கள் பண்டைக்கால, பாரம்பரிய, தலைசிறந்த ஆடைகளை அணிகின்றனர்.

அன்பான நேயர்களே, "து இனத்தவரின் வண்ணமயமான ஆடைகள்"பற்றிய கட்டுரையின் முதலாவது பகுதியை கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது. அடுத்த வாரம் இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி தொடரும் கேட்க. தவறாதீர்கள். வணக்கம் நேயர்களே!


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040