• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து இனத்தவரின் வண்ணமயமான ஆடைகள் 1
  2014-03-26 09:59:41  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் சிங்காய் பிரதேசத்தின் ஹுட்ச்சு, மின்ஹே, துங் ரென் ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த து இனத்தவர்கள், செழிப்பான பண்பாடுகளை உருவாக்கியுள்ளனர். காலப்போக்கில், வெவ்வேறான இடங்களில் வாழும் து இனத்தவரின் ஆடைகளில், வேறுபட்ட பாணிகள் காணப்படுகின்ற போதிலும், இந்த ஆடைகளின் அடிப்படை தனிச்சிறப்புகள் ஒரே மாதிரியானவை. இந்த ஆடைகள், து இன மக்களின் அழகுணர்வு மீதான சிறப்பான புரிந்துணர்வை வெளிப்படுத்துகின்றன. அவை காலங்கள் கடந்தாலும் மாற போவதில்லை.

சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களின் தனிச்சிறப்பு வாய்ந்த வாழ்க்கை பழக்கவழக்கங்களின் காரணமாக, ஒவ்வொரு இனத்தின் ஆடைகளிலும் வரலாறு, பண்பாடு, சமூகம், பழக்க வழக்கம், மதம் உள்ளிட்ட பல அம்சங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. து இன மக்கள், வாழ்க்கையையும், இயற்கையையும் மிகவும் நேசிக்கின்றனர். அழகும், மாண்பும் து இனப் பாரம்பரிய ஆடைகளின் மிக அடிப்படையான தனிச்சிறப்புகளாகும். து இன ஆடவரும் மகளிரும் அணியும் மேலாடைகளின் கழுத்துப் பட்டையில், பூத்தையலில் பல உருவங்கள் காணப்படுகின்றன. மகளிர் அணியும் சட்டைக் கைகள் நீளமானவை. அவை சிவப்பு, பச்சை, கறுப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய ஐந்து வண்ணங்களில் காணப்படுகின்றன. வண்ணமயமான நீள் சட்டைக் கைகள், பொதுவாக ஐந்து வண்ண கைகள் என அழைக்கப்படுகின்றன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040