• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து இனத்தவரின் வண்ணமயமான ஆடைகள் 1
  2014-03-26 09:59:41  cri எழுத்தின் அளவு:  A A A   

Qiao Zhi Min என்பவர், ஹு ட்ச்சு மாவட்டத்தைச் சேர்ந்த து இனத்தவர் ஆவார். அவருக்கு வயது 57. அவர் இம்மாவட்டத்தின் தேசிய இன மொழிப் பணியகத்தில் 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். து இனத்தின் தோற்றம் பற்றி அவர் தனிப்பட்ட கருத்து கொண்டுள்ளார். து இனத்தவர்கள், பண்டைக்காலத்தின் Tu Yu Hun பழங்குடியினரின் வழித்தோன்றல்கள் ஆவர். தவிர, வரலாற்றுப் போக்கில், மங்கோலிய இனத்தின் ஒருபகுதியினர், து இனத்தவர்களில் ஒன்றிணைந்தனர். மேலும், திபெத், ஹான் உள்ளிட்ட சில இனங்களின் பண்பாட்டு அம்சங்களும் து இனப் பண்பாட்டில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக து இனம் உருவாகியுள்ளது.

து இனத்தவரின் ஆடைகள், தலைமுறை தலைமுறையாக இக்காலம் வரை பரவி வருகின்றன. து இன ஆடைகள், பல்வகையான வண்ணத்தையும், தனிச்சிறப்பு வாய்ந்த பாணியையும் கொண்டுள்ளன. ஆடைகளைத் தவிர, து இன மகளிர் காதணிகளையும், அலங்காரப் பொருட்களையும் அணிந்து, வெள்ளை வண்ண சரிகையோடு பின்னப்படும் சிவப்பு வண்ண பாவாடையை அணிகின்றனர். இளம் ஆடவர்களின் இடுப்புப் பட்டையின் பின்புறத்தில் பூத்தையல் புகையிலை குழாய் அணியப்படுகிறது. இப்பட்டையின் முன்புறத்தில் Huo Lian என்னும் இரும்பு சாதனம் தொங்க விடப்படுகின்றது. அவர்கள் நீண்ட பூத்தையல் காற்சட்டை பட்டை, முன்னங்கால் உறைகள், மேக உருவ பூத்தையல் கொண்ட காலணிகளை அணிகின்றனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040