• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் லீ இனப் பண்பாடுக் கையேற்றல்
  2014-04-25 10:43:05  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஹெய்நான் மாநிலத்தின் மத்தியப் பகுதியில் ஹெய்நானின் கூரை என்று போற்றப்படும் வூ ட்சு ஷான் (Wu Zhi Shan)மலை அமைந்துள்ளது. ஏப்ரல் 2ஆம் நாள், சுமார் மூவாயிரம் லீ இன மக்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து, வூ ட்சு ஷான் மலையடிவாரத்தில் ஒன்று கூடினர். அவர்கள் அங்குள்ள பண்பாட்டுப் பூங்காவிலுள்ள லீ இன மூதாதையர் மண்டபத்தில், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை அரங்கேற்றி, லீ இனத்தின் மிக சிறப்பான விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சீனச் சந்திர நாட்காட்டியின்படி, மூன்றாவது திங்கள் 3ஆம் நாள் லீ இனத்தின் மிக சிறப்பான விழா நடைபெறுகிறது. வூ ட்சு ஷான் நகரின் பண்பாட்டுச் சதுக்கத்தில், "விறகு சேகரிப்பது" என்னும் நடனத்தைக் கண்டு மகிழும் மக்கள் நிறைந்து காணப்பட்டனர். பண்பாட்டுச் சதுக்கத்துக்கு அருகிலுள்ள லீ இன மற்றும் மியெள இனச் சிறப்பு மிக்க உணவு மற்றும் வணிகப் பொருட்கள் சாலையிலும் பயணிகள் மிக அதிகமாக காணப்பட்டனர். ஆனால் இந்நகரின் மையம் அருகிலுள்ள ஹெய்னான் மாநிலத்தின் தேசிய அருங்காட்சியகத்தின் முன்னால் பயணிகள் மிகவும் குறைவு. தற்போது, ஹெய்நான் பன்னாட்டுச் சுற்றுலா தீவின் ஆக்கப்பணியில், லீ இனப் பண்பாட்டுக் கையேற்றல், புதிய வாய்ப்புகளை வரவேற்கும் அதே வேளையில், புதிய அறைகூவல்களை எதிர்நோக்குகின்றது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040