• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் லீ இனப் பண்பாடுக் கையேற்றல்
  2014-04-25 10:43:05  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹெய்நான் மாநிலத்தின் தேசிய அருங்காட்சியகம் 1986ஆம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் பயணிகளுக்கு இலவசமாக திறக்கப்பட்டது. ஹெய்னான் மாநிலத்தின் பன்னாட்டுச் சுற்றுலா தீவின் ஆக்கப்பணி விரைவாகி வருவதுடன், வூ ட்சு ஷான் நகருக்கு வருகை தரும் பயணிகள் அதிகரித்துள்ளனர். ஆனால் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் மக்கள் அதிகமாக இல்லை என்று இவ்வருங்காட்சியகத் தலைமைக் காப்பாளர் லீ குவா ச்சுவான் தெரிவித்தார்.

"இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பயணிகளில், வெளிநாட்டுப் பயணிகளும், அறிஞர்களும் அதிகம். சாதாரணப் பயணிகள் அதிகமாக இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

பழக்க வழக்க பொருள் காட்சியரங்கில், ஹொய்பெய் மாநிலத்தின் ஹெங் ச்சுய் நகரைச் சேர்ந்த ஃபு செங் ஃபென் மற்றும் அவரது மனைவி ச்செங் சூ லன் பேரார்வத்துடன் காட்சிப் பொருட்களைக் கண்டு மகிழ்ந்தனர். அவர்கள் இந்த அரங்காட்சியகத்தைப் பார்வையிடுவது இதுவே முதன்முறை. "முன்பு தொலைக்காட்சியில் லீ இனம் பற்றிய நிகழ்ச்சியைக் கண்டோம். லீ இனம் பற்றிய எங்கள் ஆர்வத்தை அந்நிகழ்ச்சி தட்டி எழுப்பியுள்ளது. அதனால் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040