• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் லீ இனப் பண்பாடுக் கையேற்றல்
  2014-04-25 10:43:05  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ இன நெசவு நுட்ப காட்சியரங்கில், 1990ஆம் ஆண்டுகளில் பிறந்த இரண்டு லீ இன மங்கையரை செய்தியாளர் கண்டார். Qiong Zhou கழகத்தின் மூன்றாவது ஆண்டு வகுப்பில் பயில்கின்ற மாணவி Wei Jing Jie இந்த காட்சியரங்கிற்கு பல முறை வந்திருக்கிறார். வெளியூரில் கல்வி பயிலும் மாணவி ஃப் டான் இந்த அரங்கிற்கு முதன்முறையாக வருகை தந்திருந்தார். ஃப் டான் லீ இனத்தவராக இருந்த போதிலும், லீ இனத்தின் பண்பாடு மற்றும் நாட்டுப்புறப் பழக்க வழக்கங்கள் பற்றி அதிகமாக அறிந்து கொள்ளவில்லை.

தற்போது Wei Jing Jie லீ இன மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறார். அதிகமான லீ இனத்தவர்கள் லீ இன மொழியைப் பேச முடியும் என்ற போதிலும், லீ இன எழுத்துக்களை எழுதக்கூடிய மக்கள் குறைவு. மொழி மற்றும் கல்வித் துறையில் கல்வி பயிலும் Wei Jing Jie, தனது மற்றும் இதர லீ இன மக்களின் முயற்சிகள் மூலம், லீ இனப் பண்பாட்டைப் பரவல் செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

லீ இனப் பண்பாட்டின் தனிச்சிறப்பு மிக்க ஈர்ப்பாற்றலை நிலைநிறுத்துவது, ஹெய்நான் பன்னாட்டுச் சுற்றுலா தீவு ஆக்கப்பணியின் இலக்குகளில் ஒன்றாகும். சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு, ஹெய்நானின் பண்பாட்டு ஈர்ப்பாற்றலின் ஒரு முக்கிய பகுதியாகும். சிறுபான்மை தேசிய இனக் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆடை கண்காட்சிகளை நடத்துவது மூலம், லீ இனப் பண்பாட்டை மேலும் வெளிக்கொணரும் அதே வேளையில், இதை சீனாவின் இதரப் பிரதேசங்களுக்குப் பரவல் செய்ய வேண்டும் என்றும் ஹெய்நான் மாநிலத்தின் தேசிய மத விவகார அலுவலகத்தின் தலைவர் Xu Shi Shu கருத்துத் தெரிவித்தார்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040