• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் லீ இனப் பண்பாடுக் கையேற்றல்
  2014-04-25 10:43:05  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ இனப் பண்பாடு, சீனாவின் மரபுச் செல்வமாக அடுத்த தலைமுறையினருக்குக் கையேற்றப்பட வேண்டும் என்று ஃபு செங் ஃபென் கருத்துத் தெரிவித்தார். தற்போது, இளைஞர்கள் பலர் பாப்பிசைப் பாடல்களைக் கேட்க விரும்புகின்றனர். சீனாவின் இசை நாடகங்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்க விரும்பவில்லை. இது சீனாவின் சமூகச்சூழலுடன் தொடர்புடையது. ஆனால் மூதாதையர் பரவி வரும் பாரம்பரியப் பண்பாட்டின் தலைசிறந்த அம்சங்களை இழக்க கூடாது. அவை செவ்வனே பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

ஹெய்நான் பன்னாட்டுச் சுற்றுலா தீவு ஆக்கப்பணி, வூ ட்சு ஷான் பிரதேசத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது என்றும், இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் பயணிகள் அதிகரிக்கக்கூடும் என்றும் ஹெய்நான் மாநிலத்தின் தேசிய மத விவகார அலுவலகத்தின் தலைவர் Xu Shi Shu செய்தியாளரிடம் தெரிவித்தார்.

லீ இனம், ஹெய்நான் தீவில் வாழத் தொடங்கி, சுமார் 3000 ஆண்டுகள் ஆகி விட்டன. தற்போது, ஹெய்நான் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இனங்களில், லீ இன மக்கள் தொகை மிக அதிகம். லீ இனத்துக்கு தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாடு உண்டு. விறகு சேகரிப்பது என்னும் லீ இன நடனம், லீ இனத்தின் பாரம்பரிய துணி நூற்பு நுட்பம், சாயமிடுவது, நெசவு மற்றும் பூத்தையல் திறன், லீ இனத்தின் மரப் பட்டை தயாரிப்பு திறன் உள்ளிட்ட பண்பாடுகளும், நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களும் சீனாவின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. சீனாவின் நெசவுத் திறனை நிலைநாட்டிய குவாங் தெள போ அம்மையார், ஹெய்நானின் லீ இன மக்களிடமிருந்து துணி நெசவு நுட்பத்தை கற்றுக்கொண்ட பின், நெசவு இயந்திரத்தை மேம்படுத்தி, அதை சீனாவின் மஞ்சள் ஆற்றின் மத்திய பகுதி மற்றும் கீழ் பகுதிக்கு கொண்டு வந்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040