• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் மூன்றாவது திங்கள் மூன்றாம் நாள் நடைபெறும் கொண்டாட்டம்
  2014-04-30 12:51:24  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனச் சந்திர நாட்காட்டியின்படி மூன்றாவது திங்கள் 3ஆம் நாள், சீனத் தேசத்தின் மூதாதையர் குவாங் தியின் பிறந்த நாளாகும் என்று செவிவழி கதை கூறுகிறது. ஆண்டுதோறும் இந்த நாள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

சீனச் சந்திர நாட்காட்டியின்படி ஆண்டுதோறும் மூன்றாவது திங்கள் மூன்றாம் நாள், குவாங் சி மக்களின் பொது விடுமுறை நாளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் 2ஆம் நாளன்று, சீனச் சந்திர நாட்காட்டியின்படி, மூன்றாவது திங்கள் மூன்றாம் நாளாகும்.

குவாங் சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில், சுவான், ஹென், யாவ், மியெள, துங் ஆகிய இனங்கள், தலைமுறை தலைமுறை வாழும் இனங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குவாங் சியில் இவ்வினங்களின் மிக முக்கிய பாரம்பரிய விழாவைக் கொண்டாடும் வகையில், ஏப்ரல் 2ஆம் நாள் குவாங் சியிலுள்ள நான் நிங், குவெய் லீன், லியு சோ, யூ லீன், பெய் சே உள்ளிட்ட இடங்களில் சிறந்த பண்பாட்டு அம்சங்களை நிறைந்த நிகழ்ச்சிகள் பல நடத்தப்பட்டன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040