• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் மூன்றாவது திங்கள் மூன்றாம் நாள் நடைபெறும் கொண்டாட்டம்
  2014-04-30 12:51:24  cri எழுத்தின் அளவு:  A A A   

குவாங் சியிலுள்ள சான் சியாங் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் உள்ளூர் தனிச்சிறப்பு மிக்க நாட்டுப்புறப் பழக்க வழக்க நடவடிக்கைகளை வெளிப்படுத்தும நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நடவடிக்கைகள், சுமார் 2 இலட்சம் சீன மற்றும் அன்னிய பயணிகளை ஈர்த்தன.

குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில், ஆண்டுதோறும் சுமார் 2 கோடியே 70 இலட்சம் மக்கள் பல்வகை வடிவங்களில் மூன்றாவது திங்கள் மூன்றாம் நாளைக் கொண்டாடுகின்றனர். துங் இனத் தனிச்சிறப்பு மிக்க சான் சியாங் மாவட்டம், பல பயணிகளின் முதன்மை தெரிவாகும். சான் சியாங் மாவட்டத்தின் சுற்றுலா அலுவலகத்தின் துணைத் தலைவர் லியாங் ச்சுயே ச்செங் செய்தியாளருக்கு இது பற்றி அறிமுகப்படுத்தியதாவது:

"சீனாவின் சந்திர நாட்காட்டியின்படி, ஆண்டுதோறும் மூன்றாவது திங்கள் மூன்றாம் நாள், குவாங் சி முழுவதிலும், சான் சியாங் மாவட்டம் மிக அதிக பயணிகளை ஈர்க்கின்ற இடங்களில் ஒன்றாகும். இவ்விழா நாட்களில் இம்மாவட்டத்திலுள்ள தங்குமிட வசதிகள், உணவகங்கள், இயற்கைக் காட்சி தலங்கள் ஆகியவற்றில் பயணிகள் நிறைந்து காணப்படுகின்றனர். தொடக்க மதிப்பீட்டின்படி, சுமார் 2 இலட்சம் மக்கள், சான் சியாங் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளனர். பயணிகளுக்கு நல்ல சுற்றுலா அனுபவத்தை தரும் வகையில், இவ்விழாவை முன்னிட்டு, சான் சியாங் மாவட்டத்தில் அதிக ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றார் அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040