• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர விண்ணப்பித்த து சி சிதிலங்கள்
  2014-05-12 16:37:33  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர மூன்று மாநிலங்கள் கூட்டாக விண்ணப்பித்துள்ள து சி சிதிலங்கள், து சி அமைப்பு முறையின் கீழ், மனித குலத்தின் நாகரீகம் மற்றும் பண்பாட்டை அடையாளப்படுத்தும் மாதிரியாக இருக்கின்றன. குறிப்பாக, ஹுனான் மாநிலத்தின் யோங் ஷுன் து சி நகரச் சிதிலம், தற்போது சீனாவில் மிக பெரிய, மிக முழுமையாக பேணிகாக்கப்பட்ட, மிக நீண்ட வரலாறுடைய பண்டைக்கால து சி நகர சிதிலமாகும். சீனக் கட்டிட வடிவமைப்பு ஆய்வுக் கழகத்தின் கட்டிட வரலாறு ஆய்வகத்தின் தலைவர் Chen Tong Bin பேசுகையில், இந்த பண்பாட்டுச் சிதிலங்களின் பண்பாட்டு முக்கியத்துவம், கட்டிடம் மற்றும் கலை துறைகளில் மட்டுமே வெளிப்படுத்தப்படவில்லை என்றும், பல்வேறு தேசிய இனங்கள் இணக்கமாக சகவாழ்வு நடத்தும் மாதிரியை அடையாளப்படுத்துவது இதன் முக்கியத்துவம்தான் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"பொருள், கட்டிடத் தொழில் நுட்பம், கட்டிடக் கலை ஆகியவற்றில் து சி சிதிலங்களின் புகழ் முனைப்பாக இல்லை. சி ஹு ஏரியின் இயற்கைக் காட்சிகள், யுவன் வம்சத்தின் தலைநகர் ஷாங் து நகர சிதிலம் போல்லாமல், து சி சிதிலங்கள் முனைப்பான தோற்றம் அளிக்கவில்லை. து சி சிதிலங்களின் பொருள் என்ன? கட்டிடக் கலை மற்றும் கட்டிடத் தொழில் நுட்பம் ரீதியில், இச்சிதிலங்களின் முக்கியத்துவம் முனைப்பாக இல்லை. சீன வரலாற்றில் ஒருவகை நிர்வாக அமைப்பு முறை தொடர்பான தகவல்கள் இச்சிதிலங்கள் மூலம் கையேற்றப்பட்டுள்ளன. இந்த நிர்வாக அமைப்பு முறை, அப்போதைய மத்திய அரசுக்கும், உள்ளூர் இனங்களுக்கும் இணக்கமாக சகவாழ்வு நடத்தும் வாய்ப்பை தந்தது" என்றார் அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040