இந்த விண்ணப்பத் திட்டப்பணிக்கு சீனக் கட்டிட வடிவமைப்பு ஆய்வு கழகம் தலைமை தாங்கியது. இது வரை, து சி சிதிலங்களின் தொல் பொருளியல் மற்றும் அகழ்வுப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. யுனேஸ்கோ அமைப்பக்கு விண்ணப்ப ஆவணம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட பிறகு, இவ்வாண்டு ஜூலை திங்கள் உலக மரபுச் செல்வக் குழுவின் நிபுணர்கள் இச்சிதிலங்கள் அமைந்துள்ள இடங்களுக்குச் சென்று சோதனைப் பயணம் மேற்கொள்வர். 2015ஆம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பு நடத்தும் மாநாட்டில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தொடர்பான முடிவு அறிவிக்கப்படும்.
இது வரை, சீனாவின் 45 மரபுச் செல்வங்கள், உலக மரபுச் செல்வப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இப்பட்டியலில் சீன மரபுச் செல்வங்களின் எண்ணிக்கை, இத்தாலியை அடுத்து, உலகில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இவ்வாண்டு ஜூன் திங்களில் நடைபெறும் 38வது உலக மரபுச் செல்வ மாநாட்டில், சீனாவின் Dayunhe எனும் பெரும் கால்வாய், உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர விண்ணப்பம் செய்த திட்டப்பணி வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று தெரிய வருகிறது.