• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவைப் புரிந்து கொள்ள ஒரு ஜன்னலாக விளங்கும் தாள் கத்தரிப்பு கலை
  2014-05-20 16:23:20  cri எழுத்தின் அளவு:  A A A   

தாள் கத்தரிப்புக் கலை, சீனத் தேசத்தின் பாரம்பரிய நாட்டுப்புறத் கைவினைத் திறனாகும். நீ்ண்டக்கால வரலாறுடைய தாள் கத்தரிப்புக் கலை, சீனாவின் நாட்டுப்புறக் கலை வகைகளில் அரிய செல்வமாக திகழ்கின்றது. தற்போது, இக்கலை உலகின் கலைக் களஞ்சியத்தில் ஒரு பகுதியாக மாறியுள்ளது. தாள் கத்தரிப்பு அலங்காரப் பொருட்களின் தத்ரூபமான, வேடிக்கையான கலை உருவங்கள், தனிச்சிறப்பு மிக்க கலை ஈர்ப்பாற்றலைக் கொண்டுள்ளன. தாள் கத்தரிப்புக் கலை, பொதுவாக சிவப்பு வண்ண தாளில் பல வடிவங்களை கத்தரித்து அலங்களிக்கும் ஒரு வகை கலையாகும். தாள், தங்க மற்றும் வெள்ளி தகடு, மரப் பட்டை, இலை, துணி, தோல் உள்ளிட்ட தட்டை வடிவ பொருட்களில் உருவங்களைக் கத்தரிக்க முடியும். தாள் கத்தரிப்பு, கத்தரிக்கோலால் பல்வண்ண தாள்களில் பல்வகை உருவங்களைக் கத்தரிக்கும் கலை வடிவமாகும். தாள் கத்தரிப்புப் பொருட்கள், சன்னல், சுவர், கதவு, கூரை ஆகியவற்றில் அலங்காரப் பொருட்களாக அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. தாள் கத்தரிப்புக் கலை தோன்றி, பரவலாகி, சீனக் கிராமப்புற விழாக்களின் பழக்க வழக்கங்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. விழாக்களின்போது, மக்கள், அழகான வண்ணமான தாள் கத்தரிப்புப் பொருட்களை, சுவர்கள், அறையின் சன்னல்கள், கதவுகள், விளக்குகள் ஆகிவற்றில் ஒட்டுகின்றனர். இந்த தாள் கத்தரிப்பு அலங்காரப் பொருட்கள், விழாவுக்கு கோலாகலமான சூழலை உருவாக்குகின்றன.

சீனாவின் ஜீ லின் மாநிலத்தின் சாங் ஷுன் நகரில், பாவ் ஃபெங் தாள் கத்தரிப்பு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் விரைவில் பயணிகளுக்குத் திறந்து வைக்கப்படும். சீனாவில் புகழ் பெற்ற தாள் கத்தரிப்பு கலைஞரும், சாங் ஷுன் நகரின் பாவ் ஃபெங் தாள் கத்தரிப்பு கலை கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநருமான லீ பாவ் ஃபெங் அம்மையார், இந்த அருங்காட்சியகத்தின் உரிமையாளராக இருக்கிறார். இந்த அருங்காட்சியகத்தின் திறப்புக்கு அவர் சுறுசுறுப்பாக ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040