• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவைப் புரிந்து கொள்ள ஒரு ஜன்னலாக விளங்கும் தாள் கத்தரிப்பு கலை
  2014-05-20 16:23:20  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் தாள் கத்தரிப்புக் கலை, "உலகின் மனித குலத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ அடையாள படைப்புகளின் பட்டியலில்" சேர்க்கப்பட்ட பிறகு, இந்த பழமைவாய்ந்த சீனப் பாரம்பரியக் கலை, அதிக உயிராற்றலைப் பெற்றுள்ளது. மேலதிக வெளிநாட்டவர்கள், சீனக் தாள் கத்தரிப்புக் கலையில் மேலதிக கவனம் செலுத்தியுள்ளனர். தாள் கத்தரிப்புக் கலை, உலக மக்கள், சீனாவை அறிந்து கொள்ளும் ஒரு ஜன்னலாக மாறியுள்ளது.

சீன மத்திய நுண்கலைக் கழகத்தின் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ ஆய்வு மையத்தின் பேராசிரியர் Qiao Xiao Guang, சீனாவின் தாள் கத்தரிப்புக் கலைப் பற்றி அதிகமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். சீனாவின் சுமார் 30 தேசிய இனங்களுக்கு, தாள் கத்தரிப்பு பாரம்பரியம் உண்டு என்றும், சீனாவின் தாள் கத்தரிப்புக் கலை, ஆய்வு செய்யத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜீ லின் மாநிலத்தின் குவெய் நான் மாவட்டத்தின் குவெய் ஃபா மையத் துவக்கப் பள்ளியில் தாள் கத்தரிப்பு பாடம், கட்டாய பாடமாக மாறியுள்ளது. இப்பள்ளியின் நடைப்பாதை சுவர்களில், மாணவர்களும் ஆசிரியர்களும் தயாரித்த தாள் கத்தரிப்புக் கலைப் படைப்புகள் காணப்படுகின்றன. தாள் கத்தரிப்பு, குழந்தைகளின் கைவினைத் திறன், பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆற்றல் ஆகியவற்றை உயர்த்துவது மட்டுமல்ல, மஞ்சு இனப் பண்பாட்டை கையேற்றுவதற்கு உதவி செய்கிறது என்று இப்பள்ளியின் துணை தலைமையாசிரியர் Chen Li Wei தெரிவித்தார்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040