• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவைப் புரிந்து கொள்ள ஒரு ஜன்னலாக விளங்கும் தாள் கத்தரிப்பு கலை
  2014-05-20 16:23:20  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ பாவ் ஃபெங் அம்மையார், சீனாவின் பாரம்பரிய தாள் கத்தரிப்புக் கலையை, பாரம்பரிய சீன ஓவியக் கலை மற்றும் மேலை நாட்டின் எண்ணெய் ஓவியக் கலையுடன் ஒன்றிணைத்துள்ளார். அவரது தாள் கத்தரிப்பு படைப்புகளில் வட கிழக்கு சீனாவின் நாட்டுப்புறக் தாள் கத்தரிப்புக் கலையின் எளியத் தனிச்சிறப்புகளும், அவரது தலைசிறந்த தாள் கத்தரிப்புத் திறமையும் இணைந்து காணப்படுகின்றன. இப்படைப்புகள், சீனாவின் நாட்டுப்புற அளவிலுள்ள பொது மக்களின் செழிப்பான வாழ்க்கை முறை வெளிப்படுத்துகின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதிக்காலம் தொட்டு, லீ பாவ் ஃபெங்கின் தாள் கத்தரிப்புப் படைப்புகள், தென் கொரியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், ரஷியா, வட கொரியா ஆகிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த படைப்புகள், மேற்கூறிய நாடுகளின் பார்வையாளர்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் திங்கள், மங்கோலியத் தலைநகர் உலான்பாடோரில் நடைபெற்ற "ஜீலின் பண்பாட்டு வாரம்" என்ற நடவடிக்கையில், லீ பாவ் ஃபெங்கின் 30க்கும் மேலான படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இப்படைப்புகள், சீனாவின் நாட்டுப்புறத்தில் மக்களின் அருமையான வாழ்க்கையையும், அங்குள்ள எழில்மிக்க இயற்கைக் காட்சிகளையும் வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. சீனாவின் நாட்டுப்புறக் தாள் கத்தரிப்புக் கலையை, வெளிநாடுகளுக்குப் பரவல் செய்வதில் அவரது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040