• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவைப் புரிந்து கொள்ள ஒரு ஜன்னலாக விளங்கும் தாள் கத்தரிப்பு கலை
  2014-05-20 16:23:20  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் லீ பாவ் ஃபெங் அம்மையார் போல், தாள் கத்தரிப்புக் கலையை உலகிற்குப் பரவல் செய்யப் பாடுபடும் மக்கள் அதிகம். ஜீ லின் மாநிலத்தின் குவெய் நான் மாவட்டத்திலுள்ள ஃபு மின் வட்டத்தில், சீனாவின் மஞ்சு இனத் தாள் கத்தரிப்புக் கலையின் வாரிசு Xu Gui Ku வாழ்கின்றார். அவரது தாள் கத்தரிப்புப் படைப்புகள், அதிகமான வெளிநாட்டவர்களை, சீனாவின் தாள் கத்தரிப்புக் கலையின் அற்புதத்தை அறிந்து கொள்ள செய்துள்ளன.

மஞ்சு இனக் தாள் கத்தரிப்புக் கலை, சீனாவின் தாள் கத்தரிப்புக் கலையின் முக்கிய கிளையாகும். இந்த வகை தாள் கத்தரிப்புப் படைப்புகள், சீனாவின் மஞ்சு இன மக்களின் வாழ்க்கையையும், பழக்க வழக்கங்களையும் வெளிப்படுத்தி, மர்மமான கலை நறுமணத்தை கொண்டுள்ளன. Xu Gui Kuகின் படைப்புகள், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்நாடுகளின் பார்வையாளர்கள் இப்படைப்புகள் மீது பேரார்வம் காட்டியுள்ளனர். எதிர்காலத்தில் தமது மேலதிக படைப்புகளைக் கொண்டு வந்து, மேலதிக நாடுகளில் பரிமாற்ற நடவடிக்கைகளில் பங்கெடுத்து, உலகளவில் மேலதிக மக்கள் சீனாவின் பாரம்பரியப் பண்பாடுகளை அறிந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் என்றும் Xu Gui Ku தெரிவித்தார். இது, தமது சீனக் கனவுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040