• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் செங்து நகரிலுள்ள பாண்டா அஞ்சல் நிலையம்
  2014-06-06 15:32:18  cri எழுத்தின் அளவு:  A A A   

பாரம்பரியப் பண்பாட்டை, நவீன அஞ்சல் சேவை கருத்துடன் மேலும் செவ்வனே ஒன்றிணைக்கும் பொருட்டு, லீன் லெயின் தலைமையிலான குழுவினர் விபரமான சந்தை ஆய்வு மேற்கொண்டனர். பாண்டா அஞ்சல் நிலையத்துக்கு வருவோரில், பயணிகள், பண்பாடு மற்றும் கலையை நேசிக்கும் இளைஞர்கள், அஞ்சல் தலைகளைச் சேகரிப்பவர் ஆகிய மூன்று வகை மக்கள் இடம்பெறுகின்றனர் என்று அவர்கள் புரிந்து கொண்டனர். வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில், லீன் லெய் தனது கருத்தை முன்வைத்தார். முதலில், உலகிலேயே ஒரேயொரு பாண்டா அஞ்சல் நிலையத்தை உருவாக்க வேண்டும். பாண்டா அஞ்சல் அலுவலகத்துக்கு சொந்த அஞ்சல் எண்ணும், முத்திரையும் வேண்டும். அது எவ்விடத்தில் நிறுவப்பட்டதாலும், அஞ்சல் எண் "610088" ஆகும். இரண்டு, பாண்டாவை, எண்ணமும், தனிச்சிறப்பும் வாய்ந்த மனிதராக வடிவமைக்க வேண்டும். பாண்டாவின் கண்பார்வையில், செங்து நகரைப் பார்வையிட பயணிகளுக்கு வழிகாட்ட வேண்டும். மூன்று, பாண்டா கதையைச் சொல்லும் முறையில், செங்து பண்பாடுகளை அப்படியே வெளிப்படுத்த முயல வேண்டும். நான்கு, உலகளவில் பாண்டா கதாபாத்திரமாக நடிக்கும் மக்களை தெரிவு செய்ய வேண்டும். இந்த மக்கள் தத்தமது நகரின் தனிச்சிறப்புகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் உலகளவில் பாண்டா அஞ்சல் பொருட்களின் விற்பனையை விரைவுபடுத்த வேண்டும். ஐந்து, பாணியின் பல்வகைத்தன்மையில் அஞ்சல் பொருட்கள் வெளிப்படுத்த வேண்டும். சிச்சுவான் பூத்தையல் வேலை, பாரம்பரிய சீன ஓவியம், தாள் கத்தரிப்புப் படைப்பு, கேலிச்சித்திரம், எண்ணெய் ஓவியம், மின்னணு ஓவியம் ஆகியவை அஞ்சல் பொருட்களின் உருவங்களாக இருக்கலாம். லீன் லெய் கூறியதாவது:

"பாண்டா அஞ்சல் நிலையத்தின் அஞ்சல் பொருட்கள், அஞ்சல் அட்டைகள், இதர அஞ்சல் பொருட்கள், இந்த ஐந்து வகையான தனிச்சிறப்புகளை வெளிப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த அஞ்சல் பொருட்கள் செங்து நகரப் பண்பாட்டைப் பரவல் செய்யும் அதேவேளையில், நுகர்வோர், பொது மக்கள் மற்றும் பயணிகளின் வரவேற்பை பெற விரும்புகிறோம்" என்றார் அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040