• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் நடைபெற்ற கல்வியின் நான்கு கலைச் செல்வப் பொருட்காட்சி
  2014-06-13 10:41:01  cri எழுத்தின் அளவு:  A A A   

33வது சீன கல்வியின் நான்கு கலைச் செல்வப் பொருட்காட்சி ஏப்ரல் 16 முதல் 19ஆம் நாள் வரை பெய்சிங் கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. பல்வேறு நாடுகள் மற்றும் சீனாவைச் சேர்ந்த தொடர்புடைய தொழில் நிறுவனங்களும், கையெழுத்துக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள், கலைப் பொருட்கள் சேகரிப்போர் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோர் இப்பொருட்காட்சிக்கு வருகை தந்தனர்.

கல்வியின் நான்கு கலைச்செல்வங்கள், பாரம்பரிய நேர்த்தியான கையெழுத்து கலைப்படைப்புகள் மற்றும் ஓவியங்களை உருவாக்குவதில் சீன மக்கள் பயன்படுத்தும் எழுதுதூரிகை, கை, தாள், மை கல் ஆகியவையாகும். கல்விக்கான இந்த நான்கு செல்வங்கள், சீனாவில் நீண்டக்கால வரலாறுடையவை.

சீனக் கல்வியின் நான்கு கலைச் செய்வச் சங்கத்தின் தலைவர் Guo Hai Tang பேசுகையில், நடப்பு கலைச் செல்வப் பொருட்காட்சியின் காட்சி அரங்குகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் நடைபெற்ற பொருட்காட்சியில் இருந்ததை விட 120 அதிகரித்துள்ளது. சுமார் 600 தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.

Guo Hai Tangவின் அறிமுகத்தின்படி, சீனாவின் பல்வேறு இடங்களில், கல்வியின் நான்கு கலைச் செல்வத் தயாரிப்பில் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. சீனாவின் மை கல் நகரம் என அழைக்கப்படும் குவாங் துங் மாநிலத்தின் ச்சாவ் சிங் நகரின் 126 மை கல் தயாரிப்பு தொழி்ல் நிறுவனங்களும், Xuan Zhi என்ற சீனாவின் பாரம்பரிய கலை தாள் ஊரான அன்குவெய் மாநிலத்தின் சிங் மாவட்டத்தைச் சேர்ந்த 75 Xuan Zhi தாள் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களும், சீனாவின் எழுது தூரிகை ஊர் எனப்படும் ச்சியாங் சி மாநிலத்தின் வென் காங் மாவட்டத்தின் 34 தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040