• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் நடைபெற்ற கல்வியின் நான்கு கலைச் செல்வப் பொருட்காட்சி
  2014-06-13 10:41:01  cri எழுத்தின் அளவு:  A A A   

இப்பொருட்காட்சியின் பல்வேறு காட்சி அரங்குகளில் மக்கள் நிறைந்து காணப்பட்டனர். அவர்களில், நேர்த்தியான கையெழுத்துப் படைப்புகள் மற்றும் ஒவிய ஆர்வலர்களும், கொள்வனவு வணிகர்களும் அதிகம். Xuan Zhi தாள் ஊரான சிங் மாவட்டத்தின் வாங் லியு ஜி தொழில் சின்னம் கொண்ட Xuan Zhi தாள் காட்சி அரங்கின் முன்னால், கொள்வனவு வணிகர்கள் அதிகம். இக்காட்சி அரங்கின் பணியாளர் யூ பெங் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், வாங் லியு ஜி நீண்டக்கால வரலாறுடைய Xuan Zhi தாள் தயாரிப்பு தொழில் நிறுவனமாகும் என்றும், இத்தொழில் நிறுவனத்தின் வரலாறு, சிங் வம்சத்தின் பேரரசர் குவாங் ச்சு ஆட்சி புரிந்த காலத்திலிருந்து துவங்கியது என்று விவரித்தார். யூ பங் கூறியதாவது:

"சிங் வம்சத்தின் பேரரசர் குவாங் ச்சு ஆட்சி புரிந்த 19வது நூற்றாண்டில் இத்தொழில் நிறுவனம் உருவானது. 1949ஆம் ஆண்டுக்கு பின், இத்தொழில் நிறுவனம், அரசு சாரா தொழில் நிறுவனம், வட்டம் மற்றும் சிறு நகரத் தொழில் நிறுவனம், தனியார் தொழில் நிறுவனம் ஆகியவையாக வளர்ந்து வந்துள்ளது" என்றார் அவர்.

பாரம்பரிய Xuan Zhi தாள் தயாரிப்பில், குறிப்பிட்ட பிரதேசத்தில் விளையும் Pteroceltis bark, உலர்புல் உள்ளிட்ட மூல்ப பொருட்கள் முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன. Xuan Zhi தாள் தயாரிப்பில், பல பாரம்பரிய செயல்முறைகள் தேவைப்படுகின்றன. இந்த செயல்முறைகள், Xuan Zhi தாளின் தரம் மற்றும் புகழை உத்தரவாதம் செய்துள்ளன. யூ பங் கூறியதாவது:

"தரமிக்க Xuan Zhi தாளை தயாரிக்க, தரமிக்க மூலப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். செயல்முறையும் மிகவும் முக்கியமானது. Xuan Zhi தாளை தயாரிக்க, குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள Wingceltis பட்டை தெரிவுச் செய்யப்படுகிறது. அப்பிரதேசத்தின் காலநிலை, Wingceltis பட்டை வளர்வதற்கு சாதகமாக உள்ளது. பட்டை தரமிக்கது" என்றார் அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040