• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் நடைபெற்ற கல்வியின் நான்கு கலைச் செல்வப் பொருட்காட்சி
  2014-06-13 10:41:01  cri எழுத்தின் அளவு:  A A A   

Chen Ming Zhuவின் அறிமுகத்தின்படி, பாரம்பரிய எழுது தூரிகை தயாரிப்பு செய்முறைகளை Shao Zhi Yan எழுது தூரிகை பணிமனை நிலைநிறுத்தி வருகிறது. மொத்தம் 72 செய்முறைகள் இருக்கின்றன. காட்சி அரங்கில், 30 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட எழுது தூரிகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த எழுது தூரிகைகள் ஜப்பானிய வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.

எழுதுதூரிகை, மை, தாள், மை கல் ஆகியவற்றைத் தவிர, கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட கல்விக்கு தேவைப்படும் கருவி வகைகளும், பாரம்பரிய கைவினைப் பொருட்களும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஷாங்காய் மாநகரிலுள்ள பாரம்பரிய கடையான Duo Yun Xuan, ஏலக் கடை, தொல் பழம் பொருட்கள், மர பலகை கலைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் அலுவல் ஆகியவற்றை நடத்துகின்றது. Duo Yun Xuanவின் பாரம்பரிய மரப்பட்டை கலைப்பொருட்கள் இந்த பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. காட்சிப் பொருட்களில், சுமார் 100 யுவான் மதிப்புள்ள சாதாரணப் பொருட்கள் முதல், சுமார் ஒரு லட்சம் யுவான் மதிப்புள்ள அரியப் பொருட்கள் வரை இடம்பெறுகின்றன. காட்சி அரங்கு ஏற்பாட்டுப் பணிக்குப் பொறுப்பான து பெய் மிங் என்பவர், Duo Yun Xuan கடையில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்திருக்கின்றார்.

1950ஆம் ஆண்டுகளில், Duo Yun Xuan மரப் பலகை கலைப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கியது முதல், தொழில் நுட்பத்தையும் திறமைசாலிகளையும் கையேற்றி வளர்வது துண்டிக்கப்படவில்லை என்று து பெய் மிங் தெரிவித்தார். இந்த பாரம்பரிய கலை மீதான மக்களின் புரிந்துணர்வு அதிகரித்து, கலைப் பொருள் சந்தை செழிப்பாகி வருவதுடன், இக்கலையில் ஈடுபடுவதில் இளைஞர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040